இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி, நாளை வியாழன் அன்று லண்டனில் உள்ள தி ஓவல் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில், பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் ஆர்ஸ்தீப் சிங்கிற்கு முன்னுரிமை அளித்து அறிமுக வாய்ப்பு வழங்க வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் வலியுறுத்தியுள்ளார்.
பிரசித் கிருஷ்ணா இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினார், ஆனால் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் 55.17 சராசரியுடன் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார், மேலும் அவரது எகானமி விகிதம் 5.34 ஆக இருந்தது. மறுபுறம், அர்ஷ்தீப் தொடரின் தொடக்கத்திலிருந்தே அணியுடன் இருந்தபோதிலும், அவருக்கு இதுவரை டெஸ்ட் அறிமுக வாய்ப்பு கிடைக்கவில்லை.
பிரசித் வேண்டாம்:
நான்காவது டெஸ்டில் விளையாடுவதற்கு அவர் பரிசீலிக்கப்பட்டிருந்தார், ஆனால் கை காயம் காரணமாக அவர் விளையாட முடியவில்லை.அர்ஷ்தீப், பிரசித் கிருஷ்ணாவை விட மூன்று வயது இளையவராக இருப்பதால், அவருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று மஞ்ரேகர் கூறினார். இது குறித்து பேசிய அவர்,
“பிரசித் கிருஷ்ணா மற்றும் அர்ஷ்தீப் இடையே நெருக்கமான தேர்வு இருக்கும்போது, நான் அர்ஷ்தீப்பை தேர்வு செய்வேன்.”
“பிரசித் கிருஷ்ணாவை போதுமான அளவு பார்த்துவிட்டோம்… நீண்டகால நண்மை தரக்கூடிய ஒருவரில் முதலீடு செய்ய வேண்டும், அதனால் நான் அர்ஷ்தீப்பை ஆதரிக்கிறேன்.அன்ஷுல் கம்போஜைப் பொறுத்தவரை, கடுமையாக விமர்சிப்பது சற்று கடினமாக உள்ளது, ஆனால் அவரது செயல்பாட்டை விட அவரது தோற்றத்தைப் பார்க்கும்போது, அவருக்கு இரண்டாவது டெஸ்ட் விளையாட வாய்ப்பு கிடைக்காது.”
குல்தீப் வேண்டும்:
“ரிஷப் பந்த் இல்லாவிட்டாலும், இந்தியா தங்கள் பேட்டிங் வரிசையை நம்ப வேண்டும். குல்தீப் யாதவை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டும். இந்தத் தொடரில் பல தருணங்களில் குல்தீப் இந்திய பந்துவீச்சு வரிசையில் இருந்திருந்தால், வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுவதற்கு அவர் பெரிதும் உதவியிருப்பார். எனவே, குல்தீப் வர வேண்டும், ஷர்துல் தாக்குர் வெளியேற வேண்டும்.இது எனக்கு மிகவும் எளிமையான முடிவு.”
இதையும் படிங்க: ஓவல் ஆடுகள தயாரிப்பாளர் செஞ்சது தப்பு.. 4 போட்டியில இது எங்கயும் நடக்கல – கேப்டன் கில் வருத்தம்
“ஆகாஷ் தீப் விளையாடினாலும், இந்தத் தொடரில் முன்பு செய்ததை மீண்டும் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. 80-90% உடல் தகுதியுடன் இருந்தாலும், அவரது பந்துவீச்சில் எவ்வளவு திறன் இருக்கும் என்பது சந்தேகமாக உள்ளது. ஒரு போட்டியில் நல்ல செயல்பாடு காட்டிய பிறகு, அடுத்த போட்டியில் அதே திறன் இல்லை என்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், ஆகாஷ் தீப்பை விளையாட வைப்பதைத் தவிர வேறு வழியில்லை,” என்று மஞ்ரேகர் கூறினார்.






