“இந்தியா ஆஸ்திரேலியா டீம்ஸ் சலிப்பு.. இங்கிலாந்து நீங்கதான் செம்ம” – சேவாக் சர்ப்ரைஸ் பேச்சு

0
2531
Sehwag

பந்து நன்றாக சுழலும் இந்திய ஆடுகளத்தில் இங்கிலாந்து அணியால் டெஸ்ட் தொடரை மட்டுமில்லாமல் டெஸ்ட் போட்டியை கூட வெல்ல முடியாது என்று கூறப்பட்டது.

ஏனென்றால் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் ஒருநாள் கிரிக்கெட் போல அதிரடியாக விளையாடும் முறையை பின்பற்றி வருகிறது. இந்திய சூழ்நிலையில் அப்படி விளையாட முடியாது என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கூறி வந்தார்கள்.

- Advertisement -

இன்னொரு பக்கத்தில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியான முறையில் விளையாடி புதிய ரசிகர்களை உருவாக்கி டெஸ்ட் கிரிக்கெட் காப்பாற்றுகிறது என்றும், அவர்கள் ரசிகர்களை நல்ல என்டர்டைன்மென்ட் செய்கிறார்கள் என்றும் ஒரு சில முன்னாள் வீரர்கள் பாசிட்டிவான கருத்துக்களை முன்வைத்து வந்தார்கள்.

இப்படியான நிலையில் இந்தியா வந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியை ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இங்கிலாந்து அணி வென்றது எல்லோரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.

இதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடும் பாஸ்பால் முறைக்கு மேலும் ஆதரவுகள் பெருக ஆரம்பித்தது. இங்கிலாந்து அணி நிர்வாகம் தங்களது அணுகுமுறையின் மீது அதிக நம்பிக்கையையும் பிடிவாதத்தையும் வெளிப்படுத்த ஆரம்பித்தது.

- Advertisement -

இந்திய அணி முதல் போட்டியில் தோற்றது இல்லாமல், இரண்டாவது போட்டிக்கு அனுபவ வீரர்கள் பெரிய அளவில் யாரும் இல்லாமல், பலவீனமான ஒரு அணியாக களம் இறங்கி அசத்தலாக வென்றது.

இதற்கு அடுத்து தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று தற்பொழுது தொடரையும் கைப்பற்றி விட்டது. இங்கிலாந்து அணி தோல்வி அடைந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலுமே, அவர்கள் திரும்பி வருவதற்கான வாய்ப்புகளும், வெல்வதற்கான வாய்ப்புகளும் இருந்தன. ஆனால் அவர்கள் அதைப் பற்றி கவலைப்படாமல், தொடர்ந்து தங்கள் வழியில் விளையாடியதால் தோற்றார்கள்.

தற்பொழுது இது குறித்து தன்னுடைய பாணியில் நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ள சேவாக் கூறும்பொழுது “இங்கிலாந்து நீங்கள் தொடர்ந்து என்டர்டைன்மென்ட் செய்யுங்கள். இந்தியா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகள் போட்டிகளில் வெல்வது போன்ற சலிப்பான விஷயங்களை செய்யட்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்பொழுது இது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.