“முதல் நாளில் 58.2 ஓவரில் டிக்ளேர் செய்து ஆச்சரியப்படுத்திய இங்கிலாந்து; காரணம் என்ன”?

0
7374

இங்கிலாந்து அணி நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது . இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நியூசிலாந்தின் வடக்கு தீவில் அமைந்துள்ள மவுண்ட் மௌங்கனுய் நகரில் தொடங்கியது . இந்த டெஸ்ட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது .

டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சௌதீ இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார் . ஜாக் கிராவ்லி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் துவக்க வீரர்களாக களம் இறங்கினர். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரிலேயே கிராவ்லி ஆட்டம் இழக்க டக்கெட் உடன் ஜோடி சேர்ந்த போப் இரண்டாவது விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்தனர். 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சௌதீயின் வேகத்தில் ஆட்டம் இழந்தார் போப் . அவரைத் தொடர்ந்து ஆட வந்த இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரான ஜோ ரூட் 14 ரன் களில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி 152 ரண்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறிய போது களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நாயகன் ஹாரி ப்ரூக்ஸ் அதிரடியாக கவுண்டர் அட்டாக் செய்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர காரணமாக இருந்தார் . இவருடன் பென் டக்கெட்டும் மறுமுனையில் அதிரடியாக ஆட இங்கிலாந்து அணியின் பாஸ் பால் ஆட்டம் சூடு பிடித்தது .

- Advertisement -

சதம் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டக்கெட் 84 ரன்கள் எடுத்த நிலையில் டிக்னர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இவர் 68 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 14 பவுண்டரிகள் அடங்கும். ஒரு முனையில் ப்ரூக்ஸ் அதிரடியாக ஆடினாலும் மறுமுனையில் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன . கேப்டன் ஸ்டோக்ஸ் 19 ரன்கள்ிலும் விக்கெட் கீப்பர் ஃபோக்ஸ் 39 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர் . சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ப்ரூக்ஸ் 89 ரன்களில் வேக்னர் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார் .

இங்கிலாந்து அணி 58.2 ஓவர்களில் 325 ரண்களுக்கு ஒன்பது விக்கெட்டுகளை இழந்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது . நியூசிலாந்து அணியின் பந்துவீச்சில் நீல் வேக்னர் நான்கு விக்கெட்டுகளையும் டிம் சௌதீ மற்றும் ஸ்காட் குஃகெளிஜன் இரண்டு விக்கெட்டுகளையும் டிக்னர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆட்டத்தின் 58 வது ஓவரிலேயே இங்கிலாந்து அணி டிக்ளர் செய்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தாங்கள் ஏன் டிக்ளர் செய்தோம் என்பதை தங்களின் பந்துவீச்சின் மூலம் நிரூபித்தனர் இங்கிலாந்து அணியின் ஆட்டக்காரர்கள். இங்கிலாந்து அணியை தொடர்ந்து பேட்டிங் ஆட வந்த நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்களான டாம் லேதம் டெவோன் கான்வே ஆகியோர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ரண்களை எடுக்க முடியாமல் தடுமாறினர் . குறிப்பாக பிங்க் பந்து இரவு நேரத்தில் விளக்குகளின் வெளிச்சத்தில் அதிக அளவு ஸ்விங் ஆகும். இதனை பயன்படுத்தி நியூசிலாந்து அணியின் விக்கெட் களை விரைவாக வீழ்த்த வேண்டும் என்ற திட்டத்துடன் தான் இங்கிலாந்து அணி முன்கூட்டியே டிக்ளேர் செய்திருக்கிறது .

- Advertisement -

ஆட்டத்தின் நான்காவது ஓவரில் லேதம் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ராபின்சன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் . அவரைத் தொடர்ந்து ஆட வந்த முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆறு இடங்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் . இவரைத் தொடர்ந்து ஹென்றி நிக்கோலஸ் நான்கு ரண்களில் ஆண்டர்சன் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார் . இதனால் நியூசிலாந்து அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . இன்றைய ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 37 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து உள்ளது . கான்வே 17 ரன்கள்டனும் நைட் வாட்ச்மேன் வாக்னர் நான்கு ரன்கள்டனும் களத்தில் உள்ளனர் . இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் ஆண்டர்சன் இரண்டு விக்கெட்டுகளையும் ராபின்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர் .