உலகக்கோப்பையில் இருந்து இங்கிலாந்து இலங்கை நட்சத்திர வீரர்கள் காயத்தால் வெளியேறுகிறார்கள் பரிதாபநிலை!

0
1128
T20iwc2022

தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் எட்டாவது டி20 உலகக் கோப்பை தொடர், காயத்தால் பல நட்சத்திர வீரர்களை இழந்து நடந்து வருகிறது!

ஆசியக் கோப்பையின் போது முதுகு பகுதியில் காயம் ஏற்பட்ட காரணத்தால் இடம்பெறாத ஜஸ்பிரித் பும்ரா அதற்கடுத்த ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெற்றார். ஆனால் காயம் தொடர்ந்து சரியாகாத காரணத்தால் ஜஸ்பிரித் பும்ரா நடைபெறும் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார். இதேபோல் இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்ய இருந்ததால் இந்த உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார்.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்து சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. அந்த டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டிக்கு சிறிது ஓய்வு இருக்க அப்பொழுது கோல்ப் விளையாட சென்று காயமடைந்த ஜானி பேர்ஸ்டோ இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து துரதிஷ்டவசமாக வெளியேறினார்.

இதேபோல் நியூசிலாந்து அணியில் நடுவரிசையில் பலமிக்க பேட்ஸ்மேனாக திகழ்ந்த கடந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட டேரில் மிச்செல் காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். இப்படி அணிகளில் நட்சத்திர வீரர்கள் இல்லாமல்தான் இந்த டி20 உலக கோப்பை தொடர் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணியில் மிகச்சிறப்பான வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்து வந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் டாப்லி, பாகிஸ்தான் அணியுடன் நடந்த பயிற்சி போட்டிக்கு முன்பாக நடந்த பயிற்சியில் கணுக்காலில் காயம் அடைந்து இருந்தார். தற்பொழுது காயத்தை பரிசோதித்துப் பார்த்ததில் அது பெரிதாக இருப்பதால் அவர் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறுகிறார்.

- Advertisement -

இதேபோல் இலங்கை அணியின் தற்போது மிக முக்கிய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் சமீரா. நேற்று யுஏஇ அணியுடன் நடந்த முக்கியமான போட்டிகளில் மிகச் சிறப்பாக பந்து வீச்சில் செயல்பட்ட சமீரா இறுதி நேரத்தில் சதைப்பிடிப்பால் அவதிப்பட்டு வெளியேறினார். மேற்கொண்டு அவரை பரிசோதித்து பார்த்ததில் அவரால் தொடர்ந்து விளையாட முடியாது என்பது தெரியவந்தது. இவரும் இந்த டி20 உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இரண்டு அணிகளுக்குமே இது பெரிய பின்னடைவுதான். அதே சமயத்தில் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர இளம் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி காயத்திலிருந்து குணமடைந்தது வந்ததோடு, இன்று ஆப்கானிஸ்தான் அணியுடன் நடந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார். அவரது வருகையும் சிறப்பான நிலையும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு துறையை தற்போது மிகவும் பலமாக்கி உள்ளது!