தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான வெள்ளை பந்து தொடர்களுக்கான இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதைத் தொடர்ந்து அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கும் இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த மாதம் செப்டம்பர் இரண்டாம் தேதி முதல் தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கிறது. இந்த தொடரில் உள்நாட்டில் விளையாட இருக்கும் இங்கிலாந்து அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
போட்டி அட்டவணை
இந்த தொடரில் முதலில் மூன்று போட்டிகள் ஒருநாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 2, 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் செப்டம்பர் 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
மேலும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக அறிவிக்கப்பட்டிருக்கும் இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளில் சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ஜெமி ஓவர்டன்னுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சாம் கரனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதே சமயத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இங்கிலாந்து அணிக்கு ஆர்சிபி இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இங்கிலாந்து அணிகள்
ஒருநாள் அணி :
ஹாரி புரூக் (கே)
ரெஹான் அகமது
ஜோஃப்ரா ஆர்ச்சர்
சோனி பேக்கர்
டாம் பான்டன்
ஜேக்கப் பெத்தேல்
பட்லர் என்றால்
பிரைடன் கார்ஸ்
பென் டக்கெட்
வில் ஜாக்ஸ்
சாகிப் மஹ்மூத்
ஜேமி ஓவர்டன்
அடில் ரஷித்
ஜோ ரூட்
ஜேமி ஸ்மித்
இதையும் படிங்க : என்னோட ஆசிய கோப்பை இந்திய அணி இதுதான்.. 5 சதம் எடுத்திருந்தாலும் இந்த 2 பேர் வேணாம் – ஹர்பஜன் சிங் தேர்வு
டி20 அணி :
ஹாரி புரூக் (கே)
ரெஹான் அகமது
ஜோஃப்ரா ஆர்ச்சர்
டாம் பான்டன்
ஜேக்கப் பெத்தேல்
ஜோஸ் பட்லர்
பிரைடன் கார்ஸ்
லியாம் டாசன்
பென் டக்கெட்
வில் ஜாக்ஸ்
சாகிப் மஹ்மூத்
ஜேமி ஓவர்டன்
அடில் ரஷித்
பில் சால்ட்
ஜேமி ஸ்மித்
லூக் வூட்






