ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் இங்கிலாந்து வீரர்கள் ஆடுவதில் சிக்கல் – என்ன காரணம் தெரியுமா ?

0
362
England Players to miss IPL Playoffs

ஐபிஎல் தொடர் இன்னும் ஆறு நாட்களில் கோலாகலமாக அமீரக மைதானங்களில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே இந்திய மைதானங்களில் நடந்த இந்தத் தொடர் கொரோனா காரணமாக பாதியிலேயே தள்ளி வைக்கப்பட்டது. தற்போது மீதமிருக்கும் ஆட்டங்கள் அமீரகத்தில் உள்ள மூன்று மைதானங்களில் தொடங்க இருக்கிறது. ஏற்கனவே பல வீரர்கள் இந்த தொடருக்காக பயிற்சியை ஆரம்பித்து விட்டனர். கிட்டத்தட்ட அனைத்து அணிகளின் வீரர்களும் அணியில் இணைந்து விட்டமையால் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால் தற்போது இந்த தொடரில் ஆடும் இங்கிலாந்து வீரர்களுக்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. பல முன்னணி இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடரில் வெவ்வேறு அணிகளுக்கு ஆடி வருகின்றனர். இங்கிலாந்து அணியில் இருந்து 10 முன்னணி வீரர்கள் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ளனர். ஏற்கனவே பட்லர், ஸ்டோக்ஸ், ஆர்ச்சர், பேர்ஸ்ட்டோ, வோக்ஸ், மாலன் போன்ற வீரர்கள் சொந்த காரணங்களுக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்து உள்ள நிலையில் மற்ற இங்கிலாந்து வீரர்களும் ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் விளையாட முடியாத நிலை வந்துள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடர் நடந்து கொண்டிருக்கும்போதே உலகக் கோப்பை தொடருக்கு பயிற்சி எடுக்கும் வண்ணமாக இங்கிலாந்து அணி பாகிஸ்தான் டி20 தொடரில் விளையாடுகிறது. சரியாக ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுக்கள் முடிந்த பின்பு இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சொல்கிறது. வரும் அக்டோபர் 14 மற்றும் 15ம் தேதிகளில் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி மைதானத்தில் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இங்கிலாந்து அணி விளையாடுகிறது. இது முடிந்த பின் அமீரகத்தில் உள்ள மைதானங்களில் 2 பயிற்சி போட்டிகளில் உலக கோப்பை தொடருக்கு தயாராக மணமாக இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது.

பெங்களூரு அணியில் விளையாட உள்ள கிரேட்டன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெறாததால் அவர் பிளே ஆஃப் சுற்றில் ஆடுவதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் சென்னை அணியின் முக்கிய தூண்களான சாம் குரன் மற்றும் மொயின் அலி இருவரும் நிச்சயமாக பிளே ஆஃப் சுற்றில் விளையாட மாட்டார்கள். சென்னை அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் அந்த அணியை இது மிகவும் பாதிக்கும். தற்போது 7 ஆட்டங்களில் 5 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்திலிருக்கும் சென்னை அணி தன்னுடைய இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாமல் இந்தத் தொடரில் எப்படி அடுத்த சுற்றை ஆடப்போகிறது என்பதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.