“ஆர் சி பி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியை கலாய்த்த இங்கிலாந்து வீராங்கனை” – கோபத்தில் ரசிகர்கள்!

0
573

ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக்கை தொடர்ந்து இந்தியாவில் பெண்களுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்த வருடம் முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. விமன்ஸ் பிரிமியர் லீக் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த போட்டிகளில் ஐந்து அணிகள் பங்கு பெற்றிருக்கின்றன ..

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முன்னணி வீராங்கனைகள் மட்டுமல்லாது மற்ற நாடுகளைச் சார்ந்த வீராங்கனைகளும் இந்த கிரிக்கெட் போட்டியில் பங்கெடுத்துள்ளனர். சமீபத்தில் இந்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கான வீராங்கனைகளின் ஏலம் நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனைகளைத் தவிர ஆஸ்திரேலியா மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து நாடுகளைச் சார்ந்த வீராங்கனைகளும் அணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

- Advertisement -

இந்தப் போட்டி தொடர்களில் டெல்லி கேப்பிட்டல்,குஜராத் ஜெயன்ஸ் ,உபி வாரியர்ஸ்,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. தற்போது நடைபெற்று வரும் முதல் சுற்று போட்டிகளில் நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று மும்பை இந்தியன்ஸ் அணி முதலிடத்தில் இருக்கிறது. ஒரு வெற்றி மற்றும் ஒரு தோல்வியுடன் ரன் ரேட் அடிப்படையில் டெல்லி கேப்பிட்டல் அணி இரண்டாம் இடம் வகிக்கிறது.

வீரர்களின் ஏலத்தின் போது வலுவான அணியாக கருதப்பட்ட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனது இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து நான்காம் இடத்தில் இருக்கிறது. இந்த அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியிடமும் இரண்டாவது போட்டியில் மும்பை அணியிடமும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஸ்மிரிதி மந்தனா, ரிச்சா கோஸ் மற்றும் எல்லிஸ் பெர்ரி போன்ற பெண்கள் கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் இடம் பெற்றிருந்தும் அந்த அணி தோல்வியை தழுவியிருப்பது பெங்களூர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆண்கள் அணியை போலவே பெண்கள் அணியும் கோப்பையை வெல்லாமல் போய்விடுமோ என அதன் ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான அலெக்சாண்டரா கார்ட்லி ஆர்.சி.பி அணியை கலாய்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றினை பதிவேற்றி இருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் ஆர்.சி.பி மகளிர் அணி ஆர்.சி.பி ஆண்கள் அணி ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கேள்வி கேட்பது போல் ஸ்பைடர் மேன் உருவத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இந்த ட்வீட்டால் ஆர்.சி .பி ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

- Advertisement -

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் வலுவான அணியாக இருக்கிறது ஆனால் ஐபிஎல் தொடர்களில் இதுவரை சாம்பியன் பட்டத்தை வென்றதில்லை. அந்த அணியின் ஆரம்ப காலத்தில் இருந்தே விராட் கோலி கெவின் பீட்டர்சன், ஏ.பி
டிவில்லியர்ஸ்,கிரிஸ் கெயில்,ஷேன் வாட்சன்,கிளன் மேக்ஸ்வெல் என உலகின் முன்னணி வீரர்களை வைத்திருந்தும் அந்த அணியால் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை. இதனைப் போலவே தற்போது மகளிர் அணியிலும் உலகின் முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றிருந்தும் அவர்கள் தொடர்ந்து தோல்விகளை பெற்று வருவதை சித்தரிக்கும் வகையில் இங்கிலாந்து வீராங்கனை ட்வீட் அமைந்துள்ளது.