இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா மீண்டும் தங்களிடம் அதிரடியாக விளையாட மாட்டார் என்று நம்புவதாக இங்கிலாந்து வீரர் சாம் கரன் தெரிவித்திருக்கிறார்.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது செமி பைனலில் இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்த போட்டி குறித்து இங்கிலாந்து வீரர் சாம் கரன் பேசியிருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகள் 2022 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை செமி பைனலில் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்று இறுதிப் போட்டிக்கு சென்று உலகக் கோப்பையையும் வென்றது.
இதேபோல 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் செமி பைனலில் இந்திய அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு சென்று உலகக் கோப்பையை வென்றது. தற்போது மீண்டும் இரண்டு அணிகளும் செமி பைனலில் மோதிக்கொள்ள இருக்கிறார்கள். இந்த முறை வெல்லும் அணி ஆதிக்கம் செலுத்தும் அணியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடைசியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியாவின் நடைபெற்ற டி20 தொடரில் அபிஷேக் சர்மா 37 பந்துகளில் அதிரடியான சதத்தை அடித்தார். ஆனால் மீண்டும் அப்படி ஒன்றை செய்ய மாட்டார் என நம்புவதாக சாம் கரன் தெரிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க : இந்தியா ஜெயிக்க முடியாத டீம் கிடையாது.. எங்க இங்கிலாந்து 2 பேரை டார்கெட் பண்ணினா சும்மா ஜெயிக்கலாம் – ஆதர்டன் சவால்
இதுகுறித்து சாம் கரன் பேசும்பொழுது “தற்போது எங்கள் முழு கவனமும் வியாழக்கிழமை இரவில்தான் உள்ளது. அபிஷேக் சர்மா மீண்டும் அப்படியான அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்த மாட்டார் என்று நான் நம்புகிறேன். இந்த போட்டிக்காக நாங்கள் முழு அளவில் தயாராகி உள்ளோம். மீண்டும் சொல்கிறேன் நாங்கள் வியாழக்கிழமை இரவில்தான் முழு கவனத்தையும் செலுத்துகிறோம்” என்று கூறி இருக்கிறார்.