டி20 உலகக் கோப்பை 2024

அரையிறுதியில் ரோகித்தே விக்கெட்டை கொடுப்பார்.. 2022 உ.கோ-ல இந்தியாவுக்கு செஞ்ச சம்பவம் கிரேட்டானது – மொயின் அலி பேச்சு

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டு சுற்றுகள் முடிவடைந்து அரையிறுதி சுற்றுகள் நாளை முதல் ஆரம்பிக்கிறது. முதல் அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகளும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகளும் மோதிக் கொள்ள இருக்கின்றன. இதில் இந்தியா போட்டி குறித்து இங்கிலாந்து வீரர் மொயின் அலி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணிக்கு மிக நல்ல விஷயமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கில் மிகச் சிறப்பான முறையில் விளையாடினார். மேலும் பெரிய அணிக்கு எதிராக கிடைத்த வெற்றி என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பான மனநிலையில் இருக்கிறார்கள்.

அதேசமயத்தில் இங்கிலாந்து 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி படுதோல்வி அடையச் செய்திருந்தது. மொயின் அலி பேசும் பொழுது இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் அரையிறுதி போட்டி எப்படியானது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இதுகுறித்து மொயின் அலி கூறும் பொழுது “ரோகித் சர்மா உலகத்தரம் வாய்ந்த உலகத்தின் சிறந்த வீரர்களில் ஒருவர். சில நேரங்களில் ரோகித் சர்மா போன்ற வீரர்கள் அவர்களே அவுட் ஆவார்கள் என நீங்கள் நம்ப வேண்டும். இதுதான் கிரிக்கெட் குறிப்பாக டி20 கிரிக்கெட்.அதே சமயத்தில் நீங்கள் எவ்வளவு சிறப்பாக விளையாடினாலும் ரன்களுக்கு எல்லா நேரத்திலும் உத்தரவாதம் கிடையாது. மேலும் இந்திய அணிக்கு வேறு நல்ல வீரர்களும் இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியா ஒரு புத்திசாலித்தனமான பக்கம். அவர்கள் தேவையான எல்லாவற்றையும் உள்ளடக்கி இருக்கிறார்கள். எனவே நாங்கள் அவர்களை வீழ்த்த சிறந்தவர்களாக இருக்க வேண்டும். நான் இந்த மோதலை ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறேன். கடந்த முறை நாங்கள் இந்தியாவை ஆஸ்திரேலியாவில் வைத்து தோற்கடித்தோம். இந்த முறை நாங்கள் அவர்களுக்கு எதிராக நன்றாகத் திட்டமிட்டு விளையாட வேண்டும்.

இதையும் படிங்க : என்ன கொடுமை இது?.. இதெல்லாம் குற்றமா.. நாட்டுக்காக விளையாடறவன் எல்லாமே தான் செய்வான் – அஸ்வின் பேட்டி

2022 ஆம் ஆண்டு அரையிறுதி போட்டியில் நாங்கள் அவர்களை எடுத்துக் கொண்ட விதம், மற்றும் பேட்டிங்கில் நம்ப முடியாதவர்களாக சிறப்பாக இருந்தோம். நாங்கள் முதலில் அந்த விக்கெட்டில் பந்து வீச்சால் ஆட்டத்தை கட்டுப்பாட்டில் அமைத்துக் கொண்டோம். அது எங்களுக்கு ஒரு கிரேட்டான நாள் மேலும் எங்களுடைய கிரேட்டான செயல்திறன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts