ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலேயே அடிமேல் அடிவாங்கும் இங்கிலாந்து – இக்கட்டான சூழ்நிலையில் இங்கிலாந்து நிர்வாகம்

0
181
Aus vs Eng Ashes

நடந்து முடிந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி நினைத்த முடிவு கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களின் வேகத்தைத் தாக்குப் பிடிக்காமல் 10 விக்கெட் இழப்பிற்கு வெறும் 147 ரன்கள் மட்டுமே அதனுடைய முதல் இன்னிங்சில் குவித்தது.பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 425 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியை இக்கட்டான நிலைக்கு தள்ளியது.

278 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாட தொடங்கிய இங்கிலாந்து அணி ஜோ ரூட் மற்றும் டேவிட் மலானின் சிறப்பான பார்ட்னர்ஷிப் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் நல்ல நிலையில் இருந்தது. இருப்பினும் அவர்களது விக்கெட்டும் ஒரு கட்டத்தில் பறிபோக, இரண்டாவது இன்னிங்ஸ் முடிவில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகளை இழந்து 297 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.

- Advertisement -

போட்டி அபராதம் மற்றும் 5 புள்ளிகளை இழந்து தவிக்கும் இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியில் சற்று நேரம் எடுத்து பந்து வீசியதாக ஐசிசி கருதியுள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு அணி குறிப்பிட்ட ஓவர்கள் பந்துவீசியாக வேண்டும் என்பது ஐசிசி நிர்ணயித்த ஒரு முக்கிய தீர்மானம். அதன் அடிப்படையில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த பொழுது, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்தைத் தாண்டி மிக தாமதமாக பந்துவீசி இருப்பது தெரியவந்துள்ளது.

ஆட்டத்தில் தாமதமாக பந்துவீசிய காரணத்தினால், முதல் போட்டியின் கட்டண தொகையில் 100% ( கட்டண தொகை முழுவதுமாக ) அபராதமாக தற்பொழுது விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகை மட்டுமின்றி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தர வரிசை புள்ளி பட்டியலிலும் ஐந்து புள்ளிகளை இங்கிலாந்து அணி தற்போது இழந்துள்ளது. முதல் போட்டியில் தோல்வி, தாமதமாக பந்து வீசிய காரணத்தினால் நூறு சதவீத அபராதம் மற்றும் 5 புள்ளிகள் இழப்பு என அடுத்தடுத்து அடிகளை இங்கிலாந்து அணியின் பெற்று வருகிறது.