இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இரண்டு போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற நிலையில் தற்போது 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் 109 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜாக் லீச் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்..பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 360 ரன்கள் குவித்தது. ஜானி பேர்ஸ்டோ அதிகப்பட்சமாக 162 ரன்கள் குவித்தார். நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
31 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடத் தொடங்கிய நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் முடிவில் 329 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் பிளண்டல் 88* ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 2வது இன்னிங்சிலும் ஜாக் லீச் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்போது இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் விளையாடிக் கொண்டிருக்கிறது. 3 விக்கெட் இழப்பிற்கு அந்த அணி 202 ரன்கள் குவித்து வெற்றியை நெருங்கி கொண்டிருக்கிறது.
மைதானத்தில் ரசிகர்களுக்கிடையே தள்ளுமுள்ளு
போட்டி நன்றாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் இன்று திடீரென மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இங்கிலாந்து ரசிகர்கள் மற்றும் நியூசிலாந்து ரசிகர்கள் இருவரும் கலந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்தனர்.
திடீரென ஏதோ ஒரு வாக்குவாதம் ஏற்பட அவர்களுக்கிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒருசில இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அவ்வாறு தாக்கிக் கொண்ட வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.
Gazza getting rowdy at headingley pic.twitter.com/ClxT7zkTRn
— Alex Buxton (@buxton_13) June 26, 2022