உலக கிரிக்கெட்

261 ரன்கள்.. ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்.. இங்கிலாந்து அணிக்கு எதிராக.. பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு.. முல்தான் 2வது டெஸ்ட்

இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

- Advertisement -

பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட வந்திருக்கும் இங்கிலாந்து அணி முதல் போட்டியை வென்ற நிலையில், முதல் போட்டி நடைபெற்ற முல்தான் மைதானம் மற்றும் அதே ஆடுகளத்தில் இரண்டாவது போட்டி சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.

கம்ரன் குலாம் – சஜித் கான்

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் தேர்வு செய்து விளையாடி 366 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு பாபர் அசாம் இடத்தில் வந்த அறிமுக வீரர் கம்ரன் குலாம் 244 பந்து 118 ரன்கள் எடுத்து தனது முதல் போட்டியில் சதம் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் இடது கை சுழல் பந்துவீச்சாளர் ஜாக் லீச் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு துவக்க ஆட்டக்காரர் 129 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார். அந்த அணி 291 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் சுழல் பந்துவீச்சாளர் சஜித் கான் ஏழு விக்கெட் கைப்பற்றினார். பாகிஸ்தான அணி 75 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

போராடி சவால் கொடுத்த பாகிஸ்தான் அணி

இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் அணி 221 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு ஆகா சல்மான் 89 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். சோயப் பஷீர் நான்கு ஜாக் லீச் மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து மணிக்கு 297 ரன்கள் டார்கெட் கொடுக்கப்பட்டது.

இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணி இன்று மூன்றாம் நாள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்திருக்கிறது. களத்தில் ஜோ ரூட் மற்றும் ஒல்லி போப் இருவரும் இருக்கிறார்கள். கைவசம் எட்டு விக்கெட்டுகள் இருக்க வெற்றிக்கு இன்னும் 261 ரன்கள் சுழல் பந்துவீச்சு சாதகமான ஆடுகளத்தில் இங்கிலாந்துக்கு தேவைப்படுகிறது.

இதையும் படிங்க : 50 ஓவர் 180 ரன்.. துவங்கிய நாளிலேயே நியூசிலாந்து ஆதிக்கம்.. இந்திய அணி வெல்ல முடியுமா?.. முதல் டெஸ்ட்

மேலும் இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி மொத்தமாக ஆறு விக்கெட்டுகள் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகள் என 16 விக்கெட்டுகள் இன்று விழுந்திருக்கிறது. இந்த போட்டியின் தற்போதைக்கு பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை மிக அதிகமாக இருக்கின்றன.

- Advertisement -
Published by