இந்திய அணிக்கு எதிராக பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் நியூசிலாந்து அணி வலிமையான நிலையில் இருக்கிறது.
நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா வந்துள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இரண்டாவது நாளின் சோகம்
இன்று போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா 2, ஜெய்ஸ்வால் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
இதைத்தொடர்ந்து விராட் கோலி,சர்பராஸ் கான், கேஎல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என ஐந்து பேட்ஸ்மேன்கள் ஆனார்கள். அதிகபட்சமாக இந்திய அணிக்கு ரிஷப் பண்ட் 20 ரன்கள் எடுத்தார். இந்திய அணி வெறும் 46 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 5 மற்றும் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
கலக்கிய நியூசிலாந்து டாப் ஆர்டர்
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து வேலைக்கு முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. அந்த அணியின் கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரரான டாம் லாதம் 49 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்கு அடுத்து நியூசிலாந்து அணிக்கு இரண்டாவது விக்கெட்டுக்கு 75 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. வில் யங் 73 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஒருமுனையில் சிறப்பாக அதிரடியாக விளையாடிய டெவோன் கான்வே 15 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : நியூசிலாந்து பேட்ஸ்மேன் காட்டுற இந்த புத்திசாலித்தனம்.. நம்ம கிட்ட இல்ல – அனில் கும்ப்ளே விளக்கம்
இன்று இரண்டாம் நாள் ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 50 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய அணியை விட 134 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இந்திய அணியின் தரப்பில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள். இந்தியா அணில் மேற்கொண்டு நியூசிலாந்து அணியை 250 ரன்களுக்குள் மடக்கி, அடுத்து குறைந்தபட்சம் 400 முதல் 450 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறுவதற்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது.






