2வது டி20.. இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு.. சஞ்சு சாம்சனால் முக்கிய வீரரை நீக்கிய பட்லர்

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் புதன்கிழமை அன்று நடைபெற்றது. பெரும் எதிர்பார்ப்பு இடையே இந்த போட்டி நடைபெற்றாலும் இங்கிலாந்து அணியில் பேட்டிங்கில் சொதப்பியது.

- Advertisement -

இதன் காரணமாக இங்கிலாந்து அணி 132 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி 12.5 ஓவர்கள் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் தவிர மற்ற எந்த வீரரின் பந்துவீச்சும் எடுபடவில்லை.

இங்கிலாந்து அணியில் நிகழ்ந்த மாற்றம்:

குறிப்பாக இங்கிலாந்து வீரர் கெஸ் அட்கின்சன் வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் சாம்சன் 4 பவுண்டரி ஒரு சிக்சர் என 22 ரன்கள் குவித்தார். இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான இங்கிலாந்து அணி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதில் கெஸ் அட்கின்சன் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பிரைடன் கார்ஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதேபோன்று 12 வது வீரராக விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஜேக்கப் போத்தலுக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு இருப்பதால், கூடுதல் வீரராக ஜெமி ஸ்மித் சேர்க்கப்பட்டிருக்கிறார். எனினும் போட்டி தொடங்குவதற்கு முன்பே விக்கெட் கீப்பர் யார் என்பது குறித்து தெரியவரும்.

- Advertisement -

சேப்பாக்கத்தில் இந்திய அணி ரெக்கார்ட்:

இங்கிலாந்து அணியில் பென் டக்கட்,பில் சால்ட், பட்லர், ஹாரி புரூக் லிவிங்ஸ்டோன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். இங்கிலாந்து அணி முதல் முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச டி20 போட்டியில் விளையாடுகிறது. 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னையில் இந்திய அணி முதல் முறையாக டி20 போட்டியில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சேப்பாக்கம் மைதானத்தில் இந்திய அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறது. இதில் ஒரு வெற்றி ஒரு தோல்வியை இந்தியா சந்தித்திருக்கிறது .

இங்கிலாந்து அணி விவரம்: பென் டக்கெட், பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டோன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத், மார்க் வுட்

இங்கிலாந்து டி20 தொடருக்கான இந்திய அணி உத்தேசம்:
அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஹார்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி

- Advertisement -
Published by

Recent Posts