26 ஓவர்.. பேஸ்பால் ஆடிய இங்கிலாந்து ஏ அணி.. இலங்கை பரிதாப தோல்வி.. மெயின் தொடருக்கு முன்பே சறுக்கல்

0
1240

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கு முன்பாக இரண்டு அணிகளுக்கு இடையேயான பயிற்சிப் போட்டி நடைபெற்றுள்ள நிலையில் அதில் இங்கிலாந்து லயன்ஸ் அணி இலங்கை அணியை வீழ்த்தி இருக்கிறது.

இலங்கை அணிக்கு எதிரான இங்கிலாந்து அணியின் பேஸ் பால் ஆட்டம் மிக எளிதான வெற்றியை பெற வைத்துள்ளது.

- Advertisement -

இலங்கை அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி களம் இறங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில் இலங்கை அணி பேட்டிங் களம் இறங்கியது. இலங்கை அணியின் முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்து தொடர்ந்து வெளியேறினர். அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் கருணரத்னே 26 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு அதிகபட்சமாக பிரபாத் ஜெயசூர்யா 20 ரன்கள் குவிக்க, இதனால் ஸ்ரீலங்கா அணி முதல் இன்னிங்ஸில் 44 ஓவர்களுக்கு 139 ரன்கள் மட்டுமே குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதில் இங்கிலாந்து லயன்ஸ் அணியின் ஜாமன் அக்தார் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதற்குப் பிறகு இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் தொடங்கியது.

- Advertisement -

வழக்கம்போலவே இந்த முறையும் பேஸ் பால் ஆட்டத்தை கையில் எடுத்த இங்கிலாந்து லயன்ஸ் அணி 90 ஓவர்கள் பிடித்த நிலையில் 324 ரன்களில் ஆட்டம் இழந்தது. இதில் அதிகபட்சமாக ஹம்சா சாய்க் 91 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு அதிகபட்சமாக ஆல்ரிஜ் 78 ரன்களும், தொடக்க ஆட்டக்காரன் கின்னி 46 ரன்களும் குவித்தனர். அதற்குப் பிறகு 185 ரன்கள் பின்தங்கி இருந்த நிலையில் இலங்கை அணி களம் இறங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஓரளவு சிறப்பாக விளையாடிய இலங்கை அணி 87 ஓவர்களில் 306 ரன்கள் குவித்தது. இதில் மது சன்கா 77 ரன்கள் குவித்தார். மேலும் தனஞ்செயா 66 ரன்கள் குவித்தார். அதற்குப் பின் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 26.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

இதையும் படிங்க:சிஎஸ்கே கான்வே மோசமான முன்னுதாரணம்.. எல்லா கிரிக்கெட் நாடுகளும் உஷார் ஆகுங்க – பாக் கம்ரன் அக்மல் பேச்சு

இதில் தொடக்க ஆட்டக்காரர் ராபர்ட் ஏட்ஸ் 75 பந்துகளில் 57 ரன்கள் குவித்தார். இதனால் பயிற்சி போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது. இந்த இரண்டு அணிகளுக்கிடையே முதல் டெஸ்ட் போட்டி வருகிற 21ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -