சிஎஸ்கே கான்வே மோசமான முன்னுதாரணம்.. எல்லா கிரிக்கெட் நாடுகளும் உஷார் ஆகுங்க – பாக் கம்ரன் அக்மல் பேச்சு

0
462
Akmal

நியூசிலாந்து வீரர்கள் தொடர்ச்சியாக அந்த நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது சர்வதேச கிரிக்கெட்டுக்கு மிகவும் ஆபத்தான ஒன்று என பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் மத்திய சம்பள ஒப்பந்தத்தை அந்த அணியின் வெள்ளைப் பந்து அணிகளின் துவக்க ஆட்டக்காரர்கள் பின் ஆலன் மற்றும் டெவோன் கான்வே இருவரும் ஏற்கவில்லை. அவர்கள் மத்திய சம்பள ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி விட்டார்கள்.

- Advertisement -

இதற்கு முன்பாக இதற்கு முதல் விதை போட்டவராக நியூசிலாந்தின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் இருக்கிறார். இதற்கு அடுத்து நியூசிலாந்து அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் கேன் வில்லியம்சன் மத்திய சம்பள ஒப்பந்தத்தை மறுத்தார். இவர்கள் உலகம் முழுவதும் நடக்கும் டி20 கிரிக்கெட் லீக்குகளில் விளையாட விரும்புகிறார்கள். இப்படி சம்பள ஒப்பந்தத்தில் வெளியேறி விட்டால், அவர்களை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் கட்டுப்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கூறும் பொழுது ” நியூசிலாந்து வீரர்கள் அந்த கிரிக்கெட் வாரியத்தின் மத்திய சம்பள ஒப்பந்தத்தை மறுத்து வருகிறார்கள். இது சர்வதேச கிரிக்கெட்டுக்கு நல்லது கிடையாது. இது எந்த நாட்டு கிரிக்கெட்டுக்கும் நல்லது கிடையாது. கான்வே மத்திய சம்பளம் ஒப்பந்தத்தை மறுக்கிறார். இதைவிட நியூசிலாந்து டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும் பின் ஆளனும் அதையே செய்கிறார்.

- Advertisement -

இதற்கு முன் நியூசிலாந்து கிரிக்கெட்டில் போல்ட் மற்றும் பெர்குஷன் இருவரும் மத்திய சம்பள ஒப்பந்தத்தை ஏற்கவில்லை. 2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கேன் வில்லியம்சனும் இதையே செய்தார். எனவே இது நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு நல்ல அறிகுறி கிடையாது. அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டை என்ஜாய் செய்வதற்காக மட்டுமே விளையாடுகிறார்கள். மாறாக நாட்டை பெருமைப்படுத்துவதற்காக இல்லை. இது மோசமான அறிகுறி.

இதையும் படிங்க : புயல் மாதிரி.. இந்த இந்திய வீரருக்கு மட்டும் நான் உத்தரவாதம் தர மாட்டேன் – பிசிசிஐ ஜெய் ஷா கருத்து

இந்த அணுகுமுறை அடுத்தடுத்த கிரிக்கெட் நாடுகளிலும் பரவக்கூடியது. முதல்முறையாக நியூசிலாந்து கிரிக்கெட்டில் போல்ட் இந்த முடிவை எடுத்த பொழுதே அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அதற்கு எதிராக கடுமையான முடிவை எடுத்திருக்க வேண்டும். அவர்கள் மீண்டும் சர்வதேச அணிக்கு திரும்ப மாட்டார்கள். இதனால் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தவறு” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -