கெயில் டிவிலியர்ஸ் மாதிரி அபிஷேக்.. இந்த பையன் அடிச்சது சாதாரண ஆளுங்கள இல்ல – மெக்கலம் பாராட்டு

0
1134
Abhishek

இந்திய டி20 அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா விளையாடிய விதம் தாங்கள் இதுவரையில் பார்க்காத ஒன்றாக இருந்தது என இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டியில் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் குவித்து அசத்தினார். 17 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் 37 பந்தில் சதத்தை பூர்த்தி செய்து மிரட்டினார். இதில் அதிகபட்சமாக 13 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடித்து நொறுக்கினார்.

- Advertisement -

அஸ்வின் அளித்த மாபெரும் பாராட்டு

இந்த நிலையில் அபிஷேக் ஷர்மாவின் அதிரடி மற்றும் துல்லியமான தாக்குதலுக்கு பலரும் தங்களின் மனம் திறந்த பாராட்டுகளை கிரிக்கெட் உலகத்தில் தெரிவித்துக் கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அபிஷேக்சர்மா எங்கு விளையாடினாலும் சென்று டிக்கெட் வாங்கி பார்க்கும் அளவுக்கு ரசிகன் ஆகிவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

மேலும் அபிஷேக் ஷர்மாவிடம் இருக்கும் பேட் ஸ்விங் தன்னிடம் இல்லாதது குறித்து தான் பொறாமை கொள்வதாகவும், இனி பயிற்சியில் அதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்றும் மனம் திறந்து பாராட்டி இருக்கிறார். இந்த வகையில் இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் தனது பாராட்டை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

கெயில் டிவிலியர்ஸ் வகையறா

இது குறித்து பிரண்டன் மெக்கலம் கூறும் பொழுது “முதலில் அபிஷேக் சர்மாவிடம் நான் பார்த்த இன்னிங்ஸ் இதுவரையில் டி20 கிரிக்கெட்டில் நாங்கள் பார்த்திராத ஒரு இன்னிங்ஸ் ஆக இருந்தது. அவர் சாதாரண பந்துவீச்சு தாக்குதலுக்கு எதிராக இதை செய்யவில்லை. மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசக்கூடிய நான்கு வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராகவும், சிறந்த ஒரு லெக் ஸ்பின்னருக்கு எதிராகவும் அவர் இந்த சதத்தை அடித்திருக்கிறார். இது சாதாரண காரியம் இல்லை”

இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி.. வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு இருக்கு.. இது நடந்தா போதும் – அஸ்வின் கருத்து

“உண்மையை சொல்வது என்றால் இப்படி யாராவது ஒருவர் வந்து பேட்டிங் செய்தால், உங்களிடம் இருக்கும் எல்லா திட்டங்களையும் அவரிடம் நீங்கள் செய்து பார்க்கிறீர்கள். ஒருவர் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது அவரை உங்களால் தடுக்கவே முடியாது. கெயில், ஆரோன் பின்ச் மற்றும் டிவிலியர்ஸ் போன்றவர்கள் பல வருடங்களாக இந்த வடிவ கிரிக்கெட்டில் செய்து வந்ததை நாம் பார்த்தோம். மேலும் இந்த வகையான வீரர்களில் ஒருவராக அபிஷேக் ஷர்மா தன்னுடைய கைகளை உயர்த்தி இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்” எனப் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -