தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்து பிரம்மாண்ட சாதனை படைத்திருக்கிறது.
மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளை வென்று தென் ஆப்பிரிக்க அணி தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்த நிலையில் ஆறுதல் வெற்றிக்காக இங்கிலாந்து அணி போட்டியிட்டது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேமி ஸ்மித் 48 பந்துகளில் 62 ரன்கள், பென் டக்கெட் 33 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தி தந்தார்கள்.
இதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஆர்சிபி இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் 82 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 110 ரன்கள் குவித்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த ஜோ ரூட் 96 பந்துகளில் 6 பவுண்டரிகள் உடன் சதம் அடித்து 100 ரன்கள் எடுத்தார்.
இதைத்தொடர்ந்து இறுதிக்கட்டத்தில் முன்னாள் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 32 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 414 ரன்கள் குவித்தது. மேலும் 2015 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் ஏழு முறை நானூறு ரன்கள் தாண்டி குவித்து மெகா சாதனையை படைத்திருக்கிறது.
ஒருநாள் போட்டிகளில் 400-க்கும் மேற்பட்ட ரன்கள்
8- தென்னாப்பிரிக்கா
7 – இந்தியா
7-இங்கிலாந்து
3- ஆஸ்திரேலியா
2- நியூசிலாந்து
2-இலங்கை
1-ஜிம்பாப்வே
இதையும் படிங்க : என்னை தொடர்ந்து புறக்கணிச்சாங்க.. இப்ப நான் இந்த ஒரு விஷயத்தை மட்டும்தான் செய்யறேன் – ஸ்ரேயாஸ் ஐயர் ஓபன் பேட்டி
2015 உலகக் கோப்பைக்குப் பிறகு 400க்கும் மேற்பட்ட ஒருநாள் போட்டிகள்:
7-இங்கிலாந்து
3- தென்னாப்பிரிக்கா
2- இந்தியா
1- ஆஸ்திரேலியா
1- நியூசிலாந்து
1- ஜிம்பாப்வே