இந்திய கிரிக்கெட்

325 ரன்ஸ்.. ஆஸி மண்ணில் ஜோ ரூட் வரலாறு மாறியது.. ஸ்டார்க் உழைப்பு வீண்.. தண்ணி காட்டும் கடைசி ஜோடி

தற்போது நடைபெற்று வரும் ஆசஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக முதல் நாளில் ஜோ ரூட் சதத்துடன் இங்கிலாந்து அணி வலிமையான நிலையை எட்டி இருக்கிறது.

- Advertisement -

இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஆசஸ் டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டி இன்று பிரிஸ்பேன் மைதானத்தில் பகல் இரவு டெஸ்ட் போட்டியாக தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இங்கிலாந்து அணிக்கு விக்கெட் சரிவு

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் 0, ஒல்லி போப் 0 என அடுத்தடுத்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து இங்கிலாந்து அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார்கள். இதைத்தொடர்ந்து இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்கார ஜாக் கிரவுலி அரைசதம் அடித்து 93 பந்தில் 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து வந்த ஹாரி புரூக் 31, பென் ஸ்டோக்ஸ் 19, ஜெமி ஸ்மித் 0, வில் ஜேக்ஸ் 19, கஸ் அட்கின்சன் 4, பிரைடன் கார்ஸ் 0 என அடுத்தடுத்து வெளியேறினார்கள். ஒரு பக்கத்தில் இங்கிலாந்துக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும் அதை பயன்படுத்திக் கொள்ள முடியாமல் இறுதியில் சரிந்தது.

- Advertisement -

ஜோ ரூட் மாறிய வரலாறு

இந்த நிலையில் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட் ஒரு முனையில் நின்று சிறப்பாக விளையாடி நாற்பதாவது டெஸ்ட் சதத்தை அடித்தார். மேலும் அவருக்கு இது ஆஸ்திரேலியா மண்ணில் முதலாவது சதமாக பதிவாகியது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் சதம் அடித்ததில்லை என்ற வரலாற்றை மாற்றினார்.

இதையும் படிங்க: கோலி கிங், ருதுராஜ் ராஜா.. ஸ்ரேயாஸ் வந்தாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுங்க.. அஸ்வின் கோரிக்கை

மேலும் கடைசி விக்கெட்டுக்கு வந்த ஆர்ச்சர் சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 26 பந்தில் 32 ரன்கள் எடுத்திருக்கிறார். ஜோ ரூட் ஆட்டம் இழக்காமல் 202 பந்தில் 135 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்று முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் சேர்த்திருக்கிறது. கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 44 பந்தில் 61 ரன்கள் வந்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணிக்கு இது தலைவலியாக மாறியிருக்கிறது. மேலும் ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள ஸ்டார்க் உழைப்பு வீணாகி இருக்கிறது.

- Advertisement -
Published by