கோலி கிங், ருதுராஜ் ராஜா.. ஸ்ரேயாஸ் வந்தாலும் தொடர்ந்து வாய்ப்பு கொடுங்க.. அஸ்வின் கோரிக்கை

0
44

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு
நம்பர் 4 இடத்தில் நீண்ட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார். ராய்ப்பூரில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ருதுராஜ் அபாரமாக ஆடியதைத் தொடர்ந்து அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

தனது முதல் ஒருநாள் சதத்தை 77 பந்துகளில் அடித்த ருதுராஜ், இந்திய அணி 50 ஓவர்களில் 358 ரன்கள் குவிக்க உதவினார். மூன்று வருடங்களுக்கு முன்பு அறிமுகமான ருதுராஜ் இதுவரை எட்டாவது ஒருநாள் போட்டி மட்டுமே. விளையாடியுள்ளார்.

- Advertisement -


வாய்ப்பு கொடுக்கனும்:

இது குறித்து பேசிய அஸ்வின், “சில வீரர்களைப் பற்றி வெளியில் இருந்து சத்தம் உடனடியாக வந்து கழுத்தை நெரிக்கும். சிலருக்கு மிகுந்த திறமை உள்ளவர். நீண்ட ரன் கொடுக்க வேண்டும் என்று சத்தம் வரும். ஆனால் ருதுராஜுக்கு நன்றாக ஆடினாலும் எப்போதும் நீண்ட வாய்ப்பு கிடைத்ததில்லை.”

“சில சமயம் காயமும் வாய்ப்பை பாதித்தது. அது துரதிர்ஷ்டமே. ஆனால் அவரை இவ்வளவு அவசரத்துடன் பார்க்க வேண்டியதில்லை. நம்பர் 4-ல் ஆட ருதுராஜுக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. சீமர்களை நன்றாக ஆடுவார். ஆரம்பத்தில் பந்து ஸ்விங் ஆனால்தான் அவர் அவுட்டாக வாய்ப்பு உள்ளது.”

- Advertisement -

ருதுராஜ் ராஜா:

“நம்பர் 4-க்கு வந்துவிட்டால் அந்தப் பிரச்சனையே இருக்காது. ஸ்பின்னை அவரை விட சிறப்பாக விளையாட யாராலும் முடியாது. கால்களை வேகமாக அசைப்பார்.  விக்கெட்டுகளுக்கு இடையில் மிக வேகமாக ஓடுவார். எல்லா ஷாட்களும் அவரிடம் உள்ளன. இதைத் தாண்டி நம்பர் 4-க்கு ஒரு வீரர் எதுவும் நிரூபிக்கத் தேவையில்லை.”

“ஷ்ரேயஸ் ஐயர் திரும்பினாலும் ருதுராஜை இடமளிக்க முடியும். ருதுராஜை மேலே தள்ளலாம் அல்லது விராட்டே மேலே வந்து ஆடலாம். டி20-யில் அவர் அப்படி ஆடியிருக்கிறார். ருதுராஜ் போன்ற திறமை உள்ள வீரருக்கு நிச்சயம் நீண்ட ரன் கொடுக்க வேண்டும்.”

“ராஜாவும் கிங்கும், ராஜா ஸ்கொயர், கோலி கிங், ருதுராஜ் ராஜா. இருவரும் அபாரமாக ஆடினார்கள். எவ்வளவு அற்புதமான காம்பினேஷன். ஆனால் தென் ஆப்பிரிக்காவால் அது முழுமையாக மறைக்கப்பட்டுவிட்டது. அவர்களது அபார ஆட்டம் தோல்வியில் முடிந்தாலும், இந்த ஜோடி அழகாக செட் ஆகியிருக்கிறது.

இதையும் படிங்க: இந்திய அணியின் தோல்விக்கு இந்த வீரர்தான் முக்கிய காரணம்.. தம்பி ஜெய்ஸ்வால் இதை செய்பா – ஸ்ரீகாந்த் விமர்சனம்

“மஹராஜ் தென் ஆப்பிரிக்காவின் முக்கிய ஆயுதம்.ஆனால் ருதுராஜ் அவரை அடித்து நொறுக்கியதும் அவருக்கு பதிலே இல்லாமல் போனது. விராட் கோலியின் உறுதியும், ருதுராஜின் ஸ்பின் விளையாட்டும் அதிகம் பேசப்பட வேண்டியவை. ஷ்ரேயஸ் இல்லாத நேரத்தில் ருதுராஜ் டபுள் கியரில் ஆட முடியும் என்பதை நிரூபித்துவிட்டார்” என்று அஸ்வின் பாராட்டினார்.

- Advertisement -