இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிக்கு பக்கத்தில் இருக்கிறது. அதே சமயத்தில் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் தனி ஆளாக போராடி வருகிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 384 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு நட்சத்திர பேட்டர் ஜோ ரூட் 160 ரன்கள் குவித்தார். மைக்கேல் நேசர் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
ஆஸ்திரேலியா ரன் குவிப்பு
இதைத் தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க ஆட்டக்காரர் டிராவீஸ் ஹெட் அதிரடியாக விளையாடி 164 பந்தில் 163 ரன்கள் குவித்தார். அவர் ஒரு முனையில் அதிரடியாக விளையாடியது ஆஸ்திரேலியாவுக்கு ரன்களை வேகமாகக் கொண்டு வந்தது.
இன்னொரு முனையில் ஸ்டீவ் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 138 ரன்கள் எடுத்தார். இவருடன் இணைந்து விளையாடிய வெப்ஸ்டர் 71 ரன்கள் சேர்த்தார். இறுதியாக ஆஸ்திரேலிய அணி 567 ரன்கள் குவித்தது. பிரைடன் கார்ஸ் மற்றும் ஜோஸ் டங் இருவரும் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
இங்கிலாந்து விக்கெட் சரிவு
இதைத்தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் க்ரவுலி 1, பென் டக்கேட் 42, ஜோ ரூட் 6, ஹாரி புரூக் 42, வில் ஜேக்ஸ் 0, ஜேமி ஸ்மித் 26, பிரைடன் கார்ஸ் 16 ரன்கள் என அடுத்தடுத்து வெளியேற இங்கிலாந்து அணி தடுமாறியது.
இதையும் படிங்க : 154 பந்து 200 ரன்.. இந்த பையன் சாதாரண ஆள் இல்லை.. ஷமிகிட்ட ஆடின அந்த ஷாட் போதும் – அஸ்வின் பாராட்டு
இந்த நிலையில் ஒருமுனையில் தனியாக போராடிவரும் இளம் வீரர் ஜேக்கப் பதில் தனது முதல் சதத்தை அடித்து ஆட்டம் இழக்காமல் 232 பந்துகளில் 142 ரன்கள் எடுத்திருக்கிறார். இன்று நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து எட்டு விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் எடுத்திருக்கிறது. 119 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது. இதனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் கைகளே ஓங்கி இருக்கிறது.






