இந்திய அணிக்கு எதிராக நாளை மோத இருக்கும் முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து அணி நிர்வாகம் அதிரடியாக முன்கூட்டியே வெளியிட்டு இருக்கிறது.
தற்போது இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து அணி இரண்டு வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுகிறது. இதில் முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.
புதிய இங்கிலாந்து டி20 அணி
இங்கிலாந்து அணி வெள்ளை பந்து உலகக் கோப்பை தொடர்களில் அடுத்தடுத்து படுதோல்விகளை சந்தித்த காரணத்தினால், புதிய இங்கிலாந்து வெள்ளைப் பந்து அணிகளை உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஈடுபட்டு இருக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளுக்கு புதிய தலைமை பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் ஜோஸ் பட்லர் கேப்டனாக தொடர்கிறார். இத்துடன் துவக்க வீரராக பென் பக்கெட் மற்றும் பில் சால்ட் இருவரும் வருகிறார்கள். மேலும் பேட்டிங்கில் இளம் வீரரான ஜேக்கப் பெத்தேல் கொண்டுவரப்பட்டிருக்கிறார். கேப்டன் ஜோஸ் பட்லர் மூன்றாவது இடத்தில் விளையாட இறங்கிக் கொண்டிருக்கிறார். இதைத்தொடர்ந்து இளம் நம்பிக்கை நட்சத்திரம் ஹாரி புரூக், அனுபவ வீரர் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் பேட்டிங் யூனிட்டில் இருக்கிறார்கள்.
சிஎஸ்கே ஆல்ரவுண்டர் வருகை
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு வாங்கப்பட்டு இருக்கும் வேகப் பந்துவீச்சு ஆள் ரவுண்டர் ஜேமி ஓவர்டன், மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து டி20 அணிக்கு திரும்பும் வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன், அதிவேக ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் ஆகியோர் வேகப்பந்து வீச்சு யூனிட்டில் இடம்பெற்று இருக்கிறார்கள்.
மேலும் இந்த அணியில் ஒரே ஒரு பிரதான சுழல் பந்துவீச்சாளராக ஆதில் ரசித் இடம் பெற்று இருக்கிறார். இவருடன் சுழல் பந்துவீச்சு ஆள் கவுண்டர்கள் லியான் லிவிங்ஸ்டன் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டு மொத்தத்தில் இந்த புதிய இங்கிலாந்து டி20 அணி வலிமையாக காணப்படுகிறது.
இதையும் படிங்க : வெறும் 2.5 ஓவர்.. மேட்சை முடித்த இந்திய பெண்கள் அணி.. வைஷ்ணவி ஹாட்ரிக்.. U19 டி20 உலககோப்பை
இங்கிலாந்து பிளேயிங் XI: பென் டக்கெட், பில் சால்ட் (வி.கீ), ஜோஸ் பட்லர் (கே), ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித் மற்றும் மார்க் வுட்.