தற்போது மலேசியாவில் அண்டர் 19 பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதில் மலேசியா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய பெண்கள் அண்டர் 19 அணி மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டு வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறது. இன்று தனது பிரிவில் இடம் பெற்று இருக்கும் மலேசிய அணிக்கு எதிரான போட்டியில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பதினோரு பேரும் ஒற்றை இலக்கம்
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த அண்டர் 19 மலேசியா பெண்கள் அணிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகவே காத்திருந்தது. அந்த அணியில் 11 வீராங்கனைகளும் ஒற்றை இலக்கத்தை தாண்டி ரன்கள் அடிக்காத சோக நிகழ்வு நடந்தது. அந்த அணி 14.3 ஓவர்கள் விளையாடி வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆகியது.
இந்திய பெண்கள் அணியின் தரப்பில் வைஷ்ணவி சர்மா சிறப்பாக பந்து வீசி ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றியதுடன், நான்கு ஓவர்களில் ஒரு மெய்டன் செய்து ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இவருக்கு அடுத்தபடியாக ஆயுசி சுக்லா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்.
2.5 ஓவரில் போட்டியை முடித்த இந்தியா
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு தொடக்க வீராங்கனைகள் திரிஷா 12 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் ஆட்டம் இழக்காமல் 27 ரன்கள் எடுத்தார். இன்னொரு தொடக்க வீராங்கனையான ஜி.காமினி ஆட்டம் இழக்காமல் ஐந்து பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரியுடன் நான்கு ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : பிசிசிஐ 10 கட்டளைகள்.. செஞ்ச எல்லா தப்பையும் அவங்களை ஒத்துக்கிட்டாங்க – இயான் ஹீலி பேச்சு
இதைத்தொடர்ந்து அண்டர் 19 இந்திய பெண்கள் அணி 2.5 ஓவரில் விக்கெட் ஏதும் இழக்காமல் இழக்கை எட்டி பத்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டி20 போட்டியில் 120 பந்தில், 103 பந்துகளை மீதம் வைத்து இந்திய அண்டர் 19 பெண்கள் அணி வெற்றி பெற்று இருப்பது பிரம்மாண்ட வெற்றியாக பதிவாகி இருக்கிறது. மேலும் இந்திய அண்டர் 19 பெண்கள் அணி தமது சுற்றில் இருந்து அரையிறுதிக்கு முன்னேறுவதும் உறுதியாகி இருக்கிறது!