“இங்கிலாந்து பெரிய தப்பு செய்துவிட்டது.. இந்தியா கூட ஒப்பந்தம் போட்டு இருக்கனும்” – சாதனை கேப்டன் குக் பேட்டி

0
1298
Cook

இங்கிலாந்து கேப்டன்களில் பின் காலத்தில் அலைஸ்டர் குக்குக்கு மிகப்பெரிய பெருமை ஒன்று இருக்கிறது. அந்தப் பெருமை உலகின் பல கேப்டன்களுக்கு கிடைப்பது கடினம்.

அது என்னவென்றால், 2012 ஆம் ஆண்டு டெஸ்ட் தொடர் விளையாடுவதற்கு இந்தியா வந்த இங்கிலாந்து அணி, இவருடைய தலைமையில் இரண்டுக்கு ஒன்று என இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.

- Advertisement -

இதற்குப் பிறகு இந்திய மண்ணில் யாரும் டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை. மேலும் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது என்பது ஒரு உலகக்கோப்பையை வெல்வதை விட கடினமானது.

மிகக்குறிப்பாக ஆசியாவை தாண்டி வெளியில் இருந்து வரும் அணிகளுக்கு இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்வது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே கடினமானது. அடுத்து இந்திய தட்பவெப்ப நிலை அவர்களுக்கு மிகப்பெரிய சோதனையாக அமையும்.

இப்படி இருந்த பொழுது தான் குக் மற்றும் பீட்டர்சன் இருவரது சிறப்பான பேட்டிங் மற்றும் கிரீம் ஸ்வான் மாண்டி பனேசர் இருவரது சிறப்பான பந்துவீச்சாலும் இங்கிலாந்து இந்திய மண்ணில் அப்பொழுது டெஸ்ட் தொடரை வென்றது.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்த முறை பெண் ஸ்டோக்ஸ் தலைமையில் தொடரை எப்படியும் வென்று விட வேண்டும் என இங்கிலாந்து இந்தியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விளையாட வந்திருக்கிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் தயாரிப்புகள் குறித்து பேசி உள்ள குக் கூறும் பொழுது “இங்கிலாந்துக்கு இருக்கும் பிரச்சனை போட்டிக்கு தயாராகாததுதான். சுற்றுப்பயணம் வருகின்ற அணிகளுக்கு ஒழுக்கமான முறையில் பயிற்சி போட்டிகள் நடத்துவது தொடர்பாக, நாடுகளுக்கு இடையே ஏதாவது எழுதப்படாத ஒப்பந்தங்கள் இருக்க வேண்டும்.

ஆனாலும் இங்கிலாந்து அணிக்கு இந்த முறை வெற்றி பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன். அவர்கள் இப்பொழுது அதிரடியாக விளையாடி வருகிறார்கள். இந்தியாவின் சூழ்நிலைக்கு ஏற்றபடி அவர்கள் விளையாட மாட்டார்கள் என்பது நல்ல விஷயம்.

ஜோ ரூட் இந்தியாவிலும் இலங்கையிலும் ஆசிய துணைக்கண்ட சூழ்நிலைகளில் மிக நல்ல முறையில் ரன்கள் எடுத்திருக்கிறார். மேலும் அவர் மிக சுறுசுறுப்பாக இந்த ரன்களை கொண்டு வந்திருக்கிறார். அதே சமயத்தில் விக்கட்டுக்கு ஆபத்து இல்லாத முறையில் விளையாடுகிறார்” என்று கூறியிருக்கிறார்.