எப்போதுமே இங்கிலாந்து ODI-ல் ரொம்ப சுமாரான டீம்.. புள்ளி விவரங்களுடன் விமர்சித்த விரேந்தர் சேவாக்.!

0
362

2023 ஆம் ஆண்டிற்கான ஐம்பது ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 25 ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இந்த 25 ஆட்டங்களின் முடிவில் இந்திய அணி 10 புள்ளிகளுடன் பாயிண்ட்ஸ் டேபிள் முதல் இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்று இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் இருக்கின்றன.

6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா நான்காவது இடத்திலும் 4 புள்ளிகள் உடன் இலங்கை பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் முறையே ஐந்தாவது ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் இருக்கின்றன. மேலும் உலக கோப்பையில் பங்கேற்கும் அணிகள் இனிவரும் போட்டிகளில் பலம் வாய்ந்த அணிகளுடன் மோத இருப்பதால் அரையிறுதி போட்டிகளுக்கான பந்தயம் சூடு பிடித்திருக்கிறது

- Advertisement -

பங்களாதேஷ் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் இந்த வருட உலகக்கோப்பையில் எட்டாவது ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களில் இருக்கின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் போது ஆதிக்கத்துடன் விளையாடி சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்த அணி இந்த வருட உலக கோப்பையில் பரிதாபமாக தோல்வி அடைந்து ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணி விளையாடி இருக்கும் ஐந்து போட்டிகளில் நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய அணிகளிடம் தோல்வியை தழுவி இருக்கிறது. அதிலும் குறிப்பாக நேற்றைய போட்டியில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிய அதிர்ச்சி அளித்தது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்தர் சேவாக் இங்கிலாந்து அணியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார் . பலத்த எதிர்பார்ப்புகளுடன் இந்த உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்காக வந்த இங்கிலாந்து அணி தற்போது மிக மோசமான தோல்விகளை சந்தித்து ஏறக்குறைய உலகக் கோப்பை அரை இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு இழந்து விட்டது என்றே கூறும் அளவிற்கு 5 போட்டிகளில் வெறும் 2 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது .

இதுகுறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் தனது கருத்துக்களை கடுமையாக பதிவு செய்திருக்கிறார் வீரேந்தர் சேவாக். இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர்” இங்கிலாந்து அணி 50 ஓவர் கிரிக்கெட்டில் மிகவும் சுமாரான அணி. கடந்த 8 உலக கோப்பைகளில் 2019 ஆம் ஆண்டு கோப்பையை வென்றதைத் தவிர 7 முறை அரை இறுதிக்கு கூட அந்த அணியால் தகுதி பெற முடியவில்லை. இதிலிருந்து இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் எவ்வளவு சுமாராக விளையாடி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்”என்ன தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய சேவாக்” ஒரு நிலையான அணி இல்லாதது இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்திருக்கிறது. அவர்கள் தங்களுடைய அணியை அடிக்கடி மாற்றி வந்தார்கள். இது அவர்களின் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம். உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளுக்கு தயாராகும்போது நிரந்தரமான ஒரு அணியுடன் நீண்ட காலம் விளையாடுவது அணிக்கு மிகச் சிறந்த ஒன்றாக அமையும். அதை இங்கிலாந்து செய்ய தவறி இருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார்

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டை போலவே ஒரு நாள் கிரிக்கெட்டிலும் தாங்கள் ஒரு மிகச்சிறந்த அணி என்ற தவறான சிந்தனையும் இங்கிலாந்து அணியின் தொடர் தோல்விகளுக்கு ஒரு முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது என அவர் பதிவு செய்துள்ளார். ஏறக்குறைய அனைத்து கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் அரை இறுதி தேர்வில் முதல் அணியாக இடம் பெற்றிருந்த இங்கிலாந்து தற்போது உலகக்கோப்பை தொடரின் அரை இறுதி போட்டிகளுக்கு தகுதி பெறுமா என்ற கேள்விக்குறியோடு இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தினாலும் அதுதான் கிரிக்கெட்டின் சுவாரஸ்யம்.