நைட் 2 மணிக்கு எழுப்பி.. கிரிக்கெட்டுகாக இந்த விஷயத்தை செய்யச் சொன்னால் செய்வேன் – கேசவ் மகாராஜ் பேட்டி

0
39

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இரண்டு அணிகளுமே சரிசமமான பங்களிப்பை வெளிப்படுத்திய நிலையில் ட்ராவில் முடிவடைந்தது.

இந்த சூழ்நிலையில் பந்து வீச்சில் முக்கிய பங்காற்றிய தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்துவீச்சாளர் மகாராஜ் கிரிக்கெட் மீதான தனது அர்ப்பணிப்பு குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தென்னாபிரிக்காவின் சுழற் பந்துவீச்சாளர் மகாராஜ் டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கிய பங்காற்றி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 40 ஓவர்கள் பந்துவீசி 15 ஓவர்கள் மெய்டனுடன் 70 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். வெஸ்ட் இண்டீஸஸின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் விக்கெட்டுகளை இவரே வீழ்த்தி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இரண்டாவது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி மொத்தமாக ஐந்து விக்கெட்டுகள் இழந்த நிலையில், அதில் நான்கு விக்கெட்டுகளை மகாராஜ் வீழ்த்தினார். இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் மீதான தனது ஆர்வம் குறித்தும், அணிக்காக ஒரு நாள் கூட தன்னால் பந்து வீச முடியும் என்றும் சில முக்கிய கருத்துக்கள் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எனக்கு சுழற் பந்து வீச்சில் பெரிய ஆர்வம் உள்ளது, நான் அதை விரும்புகிறேன். அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்து நீங்கள் என்னை பந்து வீசச் சொன்னால் என்னால் பந்து வீச முடியும். அது என்னை உந்துதலாக வைத்திருக்கிறது. மேலும் தென்னாபிரிக்க அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும், இந்த அணியை வேறு திசையில் சிறப்பாக கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஆசை. அதனால் தேவைப்பட்டால் நாள் முழுவதும் கூட பந்து வீசுவேன்.

நான் எந்த வடிவ கிரிக்கெட் தொடரில் விளையாடினாலும், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்றவாறு எனது பணிச்சுமைகளை வைத்துக் கொள்வேன்.இதில் ஒரே ஒரு விஷயம் நீங்கள் பந்து வீசும் போது உங்கள் லைன் மற்றும் லெந்த் மட்டுமே சில சமயங்களில் மாறும். டி20 கிரிக்கெட் அல்லது 50 ஓவர் கிரிக்கெட் என எதையும் பொருட்படுத்தாமல் நான் நீண்ட நேரம் பந்து வீச விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:டி20 உலக கோப்பைக்கு தேவை.. இப்ப தேவையில்ல.. எங்க அந்த வீரர்? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது அடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி கயானாவில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -