ஆஷஸ்: ரூட் சதம், இருவர் அரைசதம்… போட்டியின் முதல் நாள் முடிவதற்குள் முதல் இன்னிங்ஸ் டிக்ளேர்… இங்கிலாந்து 2.0 மிரட்டல்! – கதிகலங்கிய ஆஸ்திரேலியா!

0
17265

ஆஷஸ் முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் ரூட் சதம், இருவர் அரைசதமடிக்க.. ஆட்டத்தின் முதல் நாள் முடிவதற்குள்ளேயே இங்கிலாந்து அணி 393/8 என டிக்ளேர் செய்தது.

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் இன்று இங்கிலாந்தில் துவங்கியுள்ளது. ஏஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் எடுத்தது. துவக்க வீரர்களாக ஜாக் கிராலி மற்றும் டக்கட் இருவரும் களமிறங்கினர்.

- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு சிவக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக ஆரம்பித்தனர். டக்கட் துரதிஷ்டவசமாக 10 ரன்களுக்கு அவுட் ஆனார். உள்ளே வந்த ஆலி போப், ஜாக் கிராளி உடன் ஜோடி சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 70 ரன்கள் சேர்க்க உதவினார். இவர் 31 ரன்கள் அடித்திருந்தபோது லயன் பந்தில் அவுட் ஆனார்.

56 பந்துகளில் அரை சதம் அடித்த ஜாக் கிராலி, அத்துடன் நிற்கவில்லை. தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். இவர் 73 பந்துகளில் 61 ரன்கள் அடித்து அவுட் ஆனார். அதிரடிக்கு பெயர் போன ஹாரி புரூக் 37 பந்துகளில் 32 ரன்கள் அடித்து வித்தியாசமான முறையில் ஆட்டம் இழந்தார்.

அடுத்ததாக உள்ளே வந்த கேப்டன் ஸ்டோக்ஸ் 1 ரன்னில் இருக்கும்பொழுது புரூக் அவுட்டான அடுத்த ஓவரே ஆட்டமிழந்து வெளியேற 176 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம் கண்டது.

- Advertisement -

அடுத்து உள்ளே வந்த ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட் உடன் சேர்ந்து அணியின் ஸ்கோர் மளமளவென உயர்த்துவதற்கு உதவினார். இவரது அதிரடி இங்கிலாந்து அணியின் ஸ்கோர் விரைவாக 300 ரன்களை கடக்க உதவியது. பேர்ஸ்டோவ் 12 பவுண்டரிகள் உட்பட 78 பந்துகளில் 78 ரன்கள் என அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டு ஆட்டம் இழந்தார். மறுபக்கம் சிறப்பாக விளையாடி வந்த ஜோ ரூட் 144 பந்துகளில் சதமடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் அடிக்கும் 30ஆவது சதமாகும்.

அதன்பின் அடுத்தடுத்து 2 சிக்ஸர் அடித்துமுடிக்க, 78 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 393 ரன்களில் இங்கிலாந்து அணி இருந்தபோது, ஸ்டோக்ஸ் டிக்ளேர் செய்வதாக களத்தில் இருந்த வீரர்களை உள்ளே அழைத்தார்.

அடுத்ததாக முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸி., அணி முதல் நாள் முடிவின்போது 14 ரன்கள் அடித்தது.