இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஜாம்பவான் வீரர் விராட் கோலி முதல் இன்னிங்சில் 5 ரன்கள் வெளியேறினாலும், இரண்டாவது இன்னிங்ஸில்100 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் விராட் கோலியின் இந்த மாற்றம் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சிறப்பான வெற்றியைப் பெற்ற இந்திய அணி
விராட் கோலியின் சமீபத்திய பேட்டிங் ஃபார்ம் மிகவும் கவலைக்குரிய வகையிலேயே அமைந்தது. அதிலும் சமீபத்தில் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வந்தது. அதிலும் குறிப்பாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியதோடுஅவரது பேட்டிங் அணுகுமுறையும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 5 ரன்னில் வெளியேறினாலும் இரண்டாவது இன்னிங்ஸில் 100 ரன்கள் அடித்து இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலி அழுத்தமின்றி விளையாடியது இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியதற்கு காரணம் என்று கூறி இருக்கிறார்.
விராட் கோலி சிறப்பாக விளையாட அதுவே காரணம்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி பேட்டிங் செய்ய உள்ளே வரும் போது அவரது உடல் எந்தவிதமான அழுத்தமும் இன்றி முற்றிலும் இயல்பு நிலையில் இருந்தது. முதலில் இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் விராட் கோலி அழுத்தத்தில் இருந்திருப்பார். இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி இயல்பாக விளையாட வழிவகை அமைந்ததோடு அவர் கால்களை நகர்த்தி விளையாடுவதற்கு ஏதுவாகவும் அமைந்தது.
இதையும் படிங்க:548 நாள்ல.. ஜெய்ஸ்வால் இப்படி மாறுவார்னு.. கொஞ்சம் கூட நினைக்கல.. அவர் வேற ரகம் – ராகுல் டிராவிட் பேட்டி
இந்த விஷயம் குறித்து யோசித்துப் பார்த்தால் விராட் கோலிக்கு இந்த அணுகுமுறை சிறந்த நிலையை கொடுத்திருக்கலாம். ஆஸ்திரேலியா போன்ற பவுன்ஸ் தன்மை கொண்ட ஆடுகளங்களில் அந்த வகையான விளிம்பு நிலை முற்றிலும் தேவை” என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தோல்வியை அடைந்திருக்கும் நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுவதற்கு கடுமையாக முயற்சிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.