நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நேபாள் அணிகளுக்கு இடையேயான t20 உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெறும் நான்கு கிரன் வித்தியாசத்தில் நேபால் அணி இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.
இந்த சூழ்நிலையில் கிரிக்கெட் வரலாற்றிலேயே இன்று போல் தோல்வியை நினைத்து நான் அஞ்சியது இல்லை என்ற ஜாஸ் பட்லர் கூறியிருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு களம் இறங்கிய நேபால் அணியை இங்கிலாந்து அணியை எதிர்த்து விரைவாக ஆட்டம் இழந்து விடும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நேபால் அணி சிறப்பான கிரிக்கெட்டை விளையாடியது.
அந்த அணியின் உபேந்திரா சிங் 44 ரன்கள் மற்றும் லோகேஷ் 39 ரன்கள் என போட்டியை நெருங்கிக் கொண்டு வந்தனர். ஆனால் கடைசி ஓவரை துல்லியமான யார்க்கர்கள் கொண்டு சாம் கரன் வீச அந்த ஓவரில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்த நேபால் அணியின் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தோல்வி அடைந்தாலும் இவ்வளவு பெரிய அணிக்கு எதிராக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நேபால் அணிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை கூறி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் இந்த போட்டியில் தனது அனுபவம் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “எனது கிரிக்கெட் வரலாற்றில் இன்று போல் தோல்வியை நினைத்து நான் ஒருபோதும் அஞ்சியதில்லை. இன்று தோற்றால் நாம் எவ்வளவு அவமானப்படுவோம் என்று கேப்டன் ஹாரி ப்ரூக்ஸ் என்னிடம் பேசினார். இவ்வளவு சிறிய அணியாக இருந்த போதிலும் எங்களுக்கு சவாலை விட முடிந்த நேபாள அணிக்கு எனது வணக்கம்” என்று பட்லர் பேசியிருக்கிறார்.






