இந்த அவமானம் தேவையா.. பாபர் அசாம் குறித்த கேள்வி.. பென் ஸ்டோக்ஸ் கொடுத்த பதில்.. வாயடைத்து போன பாக் நிருபர்

0
3358

இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயத்திலிருந்து மீண்டும் அணிக்கு திரும்பும் நிலையில் பாகிஸ்தான் நிருபர் பாகிஸ்தான் அணி குறித்த கேள்விக்கு ஸ்டோக்ஸ் தனது நேர்படையான பதிலை அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

திரும்பி வருகிறார் பென் ஸ்டோக்ஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபகாலமாக எதிர்பாராத தோல்விகளை சந்தித்து வருகிறது. டி20 உலக கோப்பையில் முதல் சுற்றிலேயே வெளியேறிய நிலையில் அதற்கு பிறகு சொந்த மண்ணில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை சந்தித்தது.

அதற்குப் பிறகு நடைபெற்ற வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 500 ரன்கள் குவித்த நிலையிலும் தோல்வியை தழுவி தற்போது மோசமான விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரர்களாக கருதப்படும் பாபர் அசாம் மற்றும் ஷாகின் ஷா அபரிடி மற்றும் நஷீம் ஷா ஆகியோர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பாக அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளனர். தற்போது காயத்திலிருந்து குணமாகி இரண்டாவது போட்டிக்கு களமிறங்க உள்ள ஸ்டோக்ஸ் செய்தியாளர் கேட்ட கேள்விக்கு தனது வெளிப்படையான பதிலை அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

அதுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை

இது குறித்து அவர் கூறும் போது “பாகிஸ்தான் அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ள பாபர் அசாம் மற்றும் இரண்டு நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை பற்றி கேட்கிறீர்கள். இது அனைத்துமே பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கும் அவர்களுக்கும் இடையேயான பிரச்சனை. அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தெளிவாக கூறிக்கொள்கிறேன். மேலும் நான் என்னை ஒரு நேர்மையான மனநிலையில் வைத்திருக்க விரும்புகிறேன். நீங்கள் காயத்திலிருந்து மீண்டும் களத்தில் இறங்கும்போது முன்பை விட நல்ல உடல் தகுதியுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க:கம்பீருக்கு சின்னதா கிடைச்சா போதும்.. இந்த விஷயங்கள்ல மனுஷன் வேற லெவல் – ஆஸி ஸ்டார்க் பேட்டி

நான் காயமடைவதற்கு முன்பாக எந்த ஒரு டெஸ்ட் போட்டியிலும் தவற விடுவதை பார்த்திருக்க மாட்டீர்கள். அது ஒரு அரிதான நிகழ்வு. நாங்கள் எப்போதுமே ஒரு போட்டியின் முடிவை கொண்டு வருவதற்காகவே விளையாடுகிறோம். சில நேரங்களில் ஆட்டத்தின் தருணங்கள் வேறு மாதிரியாக இருக்கும். கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்திருக்க வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் செய்ய வேண்டும். இதனால் அது போன்ற நிகழ்வு இரண்டு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பது போன்று இருக்கும்” என்று கூறியிருக்கிறார். பாகிஸ்தான் வீரர்கள் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த நிருபர் கேட்ட கேள்விக்கு ஸ்டோக்சின் பதில் அவரை வாயடைத்துப் போக வைத்து இருக்கிறது என்று கூறலாம்.

- Advertisement -