இந்திய அணியின் தற்போதைய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சிறந்த கிரிக்கெட் சிந்தனையாளர் என ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் கூறியிருக்கிறார்.
இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணிக்கு தற்போது புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்று இருக்கும் கம்பீர் எப்படியானவர் என்பது குறித்து ஆஸ்திரேலியா வீரர் மிட்சல் ஸ்டார்க் கூறி இருக்கிறார்.
கொல்கத்தா அணியில் கிடைத்த அறிமுகம்
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஒரு சிறந்த இறுதிக்கட்ட ஓவர்களை வீசக்கூடிய வேகப்பந்து பேச்சாளர் தேவைப்பட்டது. 2024 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு மென்டராக வந்த கம்பீர் 24 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து மிட்சல் ஸ்டார்க்கை அந்த இடத்திற்கு மிகத் தைரியமான முறையில் வாங்கி வந்தார்.
இந்த நிலையில் லீக் சுற்றில் போட்டிகள் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக ஸ்டார்க் தன்னுடைய ஃபார்முக்கு திரும்பி வந்தார். இறுதியாக வழக்கம்போல் நாக் அவுட் சுற்றில் தன்னுடைய திறமையை நிரூபித்து கொல்கத்தா அணி கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார். இருவரும் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு ஒன்றாக சேர்ந்து பணியாற்றியதால் நல்ல புரிதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
கம்பீர் சிறந்த சிந்தனையாளர்
கம்பீர் குறித்து பேசி இருக்கும் மிட்சல் ஸ்டார்க் கூறும் பொழுது “ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் கம்பீர் உடனான எனது அனுபவத்தை கூறுவது என்றால், அவர் கிரிக்கெட் பற்றிய மிகச் சிறந்த சிந்தனையை கொண்டிருக்க கூடியவர். அவர் எப்போதும் எதிரணி பற்றியும், பேட்டிங் யூனிட் ஆக எதிரணியிடம் ரண்களை குவிப்பது எப்படி என்றும், பவுலிங் யூனிட்டாக அவர்களை சுருட்டுவது எப்படி என்றும் எப்பொழுதும் சிந்திப்பார்”
“மேலும் அவர் ஒரு தனிப்பட்ட வீரர் குறித்து வெறுமனே சிந்தித்துக் கொண்டிருக்க கூடியவர் கிடையாது. அணியின் மீது கவனத்தோடு இருப்பதும், கிடைக்கும் சிறிய விஷயங்களைக் கொண்டு மேலே போவது என்பதும், இத்தோடு தொழில்நுட்ப ரீதியாகவும் மற்றும் பீல்ட் ப்ளேஸ்மெண்ட் என எல்லாவற்றிலும் இருந்து எதையாவது எடுத்து எப்போதும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை பற்றி சிந்திக்க கூடியவர்”
இதையும் படிங்க : நாங்க வெறும் 100 ரன்னில் சுருளுவோம்.. ஆனா பேட்மேன்களுக்கு அதை மட்டும் செய்யவே மாட்டேன் – கம்பீர் உறுதி
“நான் அவருடன் ஐபிஎல் தொடரில் 9 வாரங்கள் செலவிட்டது மிகவும் அருமையான ஒன்றாக அமைந்திருந்தது. அவருக்கு டி20 கிரிக்கெட் அமைப்பில் நல்ல அனுபவமும் அறிவும் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.