கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

“மாற்று வீரராக ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இணைகிறாரா.?” – இங்கிலாந்து கோச் விளக்கம்

தற்போது நடைபெற்று வரும் ஐம்பது ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டிகளில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் 229 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்த தோல்வியின் மூலம் உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து மூன்றாவது தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அந்த அணி விளையாட இருக்கும் 5 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும். மேலும் அந்த அணியின் நெட் ரன் ரேட் மிகவும் மோசமாக இருப்பதால் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 399 ரன்கள் எடுத்தது.

இந்த மிகப்பெரிய இலக்கை தொடர்ச்சி ஆடிய இங்கிலாந்து 22 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 229 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. மேலும் இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் ரீஸ் டாப்லிக்கு கைவிரலில் காயம் ஏற்பட்டது. அவர் வாண்டார் டுசன் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது நடுவிரலில் காயமடைந்ததால் போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார்.

எனினும் மீண்டும் திரும்பி வந்து பந்து வீசி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர் இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் போது ஆட வரவில்லை. மேலும் இந்த உலகக் கோப்பை போட்டி தொடரில் அவர் பங்கேற்பதும் சந்தேகமாக இருக்கிறது. இதனால் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் சேர்க்கப்படலாம் என்று பரவலான கருத்து நிலவி வந்தது. இது குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் தனது கருத்தை பகிர்ந்து இருக்கிறார்.

- Advertisement -

போட்டிக்கு பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மேத்யூ மார்ட்” நேர்மறையான சிந்தனையுடன் இந்தப் போட்டிக்கு வந்தோம். இன்று நாங்கள் அடைந்திருக்கும் தோல்வி மோசமானது. அதனை சமாளிக்காமல் ஏற்றுக் கொள்கிறேன். இந்த ஆடுகளத்தின் தரவுகளை வைத்து பார்க்கும் போது இரண்டாவது பேட்டிங் செய்தால் வெற்றி பெறலாம் என்று முடிவெடுத்தோம். இன்று நிலவிய வெப்பம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. இந்தப் போட்டிக்கான ஆடுகளம் ஒரு மிகச் சிறந்த கிரிக்கெட் ஆடுகளம்”என தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர்” கையில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகும் டாப்லி வந்து பந்து வீசியது அணிக்காகவும் நாட்டிற்காகவும் அவரது அர்ப்பணிப்பு உணர்வை காட்டுகிறது. அவரது காயத்தை பற்றி ஆலோசித்து வருகிறோம். அந்த காயத்தை பார்க்கும்போது விரலில் ஏற்பட்ட முடிவு போன்று தெரிகிறது. எனினும் எக்ஸ்ரே எடுத்த பின்பு தான் உறுதியான முடிவு தெரியவரும்”எனக் கூறினார். டாப்லி காயம் அடைந்ததால் இங்கிலாந்து அணியுடன் சுற்றுப்பயணம் செய்து வரும் ஆர்ச்சர் அணியில் இடம் பெறலாம் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதற்கு இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மேத்யூ மாட் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இது குறித்து பேசி இருக்கும் அவர்” முழங்கை காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆர்ச்சர் அணித் தேர்விற்கு பரிசீலிக்கப்பட மாட்டார். அவர் அணியின் மெடிக்கல் டீமை சந்தித்து இருக்கிறார் என்றாலும் இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக ரிஸ் டாப்லி இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து சிறப்பாக செயல்பட்டு வந்தார். மேலும் இந்த உலகக் கோப்பையிலும் பவர் பிளே ஓவர்களில் இங்கிலாந்து அணிக்கு விக்கெட் வீழ்ச்சி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அவர் தொடர்ச்சியாக காயங்களில் சிக்குவது தொடர் கதையாகி இருக்கிறது.

- Advertisement -
Published by