இந்திய கிரிக்கெட்

இந்திய அணியை அதை செய்யவே விடமாட்டோம்.. முன்வச்ச கால் பின்னுக்கு போகாது – பென் ஸ்டோக்ஸ் சவால்

தற்போது இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு படி கூட இங்கிலாந்து அணி விட்டு தராது என கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சவால் விட்டிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என முன்னிலையில் இருக்கிறது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று துவங்க இருக்கிறது

கில் கூறிய குற்றச்சாட்டு

மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய வந்த பொழுது ஏழு நிமிடங்கள் இருந்த நிலையில் வேண்டுமென்றே தொடக்க ஆட்டக்காரர்கள் நேரத்தை ஓட்டினார்கள். இதற்கு இந்திய கேப்டன் பில் கடுமையான முறையில் களத்தில் மோதினார்.

மேலும் நேற்று கில் இங்கிலாந்து அணி மோசடி செய்ததாக தெரிவித்திருந்தார். இந்த வகையில் எந்த ஒரு அணியும் செயல்படக்கூடாது எனவும் கூறியிருந்தார். தற்போது இந்திய கேப்டன் மற்றும் இந்திய அணிக்கு சவால் விடும் விதமாக பென் ஸ்டோக்ஸ் இது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

எதையும் விட்டுத்தர மாட்டோம்

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் பேசும் பொழுது ” தற்போது இந்திய கேப்டன் குற்றச்சாட்டு பற்றி நாங்கள் வெளியில் சென்று எந்த விவாதத்தையும் தொடங்கப் போவதில்லை. ஏனென்றால் நாம் தற்போது செய்ய செய்ய வேண்டியது இருந்து இது நம்முடைய கவனத்தை திசை திருப்பி விடும். நாங்கள் இந்த விஷயம் குறித்து எந்த விதமான கருத்தையும் தெரிவிக்க போவது கிடையாது”

இதையும் படிங்க : இங்கிலாந்த ஜெயிக்க வச்சினேனா?.. நான் அப்ப பண்ணினது தப்பே கிடையாது – கேப்டன் கில் மறுப்பு

“அதே சமயத்தில் நாங்கள் ஒரு அணியாக எந்த விஷயத்திலும் பின்வாங்க போவதும் கிடையாது. எந்த ஒரு எதிர் அணியையும் எங்களுக்கு எதிராக போராடுவதற்கு முயற்சி செய்ய நாங்கள் விடமாட்டோம். எங்களுக்கு எதிராக இந்திய அணியை மீண்டு வர அனுமதிக்க மாட்டோம்” என்று அதிரடியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Ben Stokes