இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் கோபப்பட்டதே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்ததா? என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேட்டி அளித்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெல்லும் நிலையில் இருந்து இந்திய அணி தோல்வி அடைந்தது. மேலும் தொடரில் முன்னிலை பெறும் வாய்ப்பையும் தவறவிட்டது.
இங்கிலாந்து செய்த காரியம்
இந்த டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்ய இங்கிலாந்து அணி வந்த பொழுது தொடக்க ஆட்டக்கார ஜாக் கிரவுலி கால தாமதம் வேண்டுமென்றே செய்தார். இதன் காரணமாக இந்திய கேப்டன் கில் அவருடன் கடுமையான முறையில் வாக்குவாதம் செய்தார்.
இந்த நிலையில் இந்திய வீரர்கள் தங்களது தொடக்க ஆட்டக்காரர்களை சூழ்ந்து கொண்டு சண்டையிட்டது தாங்கள் அந்த போட்டியை வெல்வதற்கான உத்வேகத்தை கொடுத்தது என இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கூறியிருந்தார். இந்திய கேப்டனின் அணுகுமுறை இந்திய அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டதாக இங்கிலாந்து தரப்பில் கூறப்பட்டது.
நான் தவறு செய்யவில்லை
இது குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் சுப்மன் கில் கூறும் பொழுது ” அந்த நாள் ஆட்டத்தில் ஏழு நிமிடங்கள் மீது இருந்தது. இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் 90 நொடிகள் தாமதமாக களத்திற்கு வந்தார்கள். பின்பு களத்திற்கு வந்த பிறகு தகாத வகையில் அவர்கள் நேரத்தை வீணடித்தார்கள். 10 முதல் 20 வினாடிகள் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது”
இதையும் படிங்க : வெறும் 15 ஓவர்.. ஆஸி ஆடிய ருத்ர தாண்டவம்.. ரசல் அதிரடி வீண்.. வெஸ்ட் இண்டீஸ் மீண்டும் சொந்த மண்ணில் சோகம்
“அப்படியான சூழ்நிலையில் நாங்கள் பேட்டிங் செய்ய வந்தாலும் இங்கிலாந்து செய்ததை செய்வோம். ஆனால் அதற்கென்று ஒரு வழிமுறை இருக்கிறது. ஏதாவது காயம் அடைந்தால் பிசியோவை வர வைப்பதில் நியாயம் இருக்கிறது. ஆனால் இங்கிலாந்து செய்ததில் நியாயம் இல்லை. எனவே அந்த நேரத்தில் நான் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது எனக்கு பெரிய தவறாக தெரியவில்லை” என்று கூறி இருக்கிறார்.






