ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து இந்த மாதத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. தற்பொழுது இதில் டி20 தொடரில் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ரூல்ட் அவுட் ஆகியிருக்கிறார். மேலும் இங்கிலாந்து டி20 அணிக்கு புதிய கேப்டன் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இங்கிலாந்து வெள்ளை பந்து அணிகளின் செயல்பாடு சில ஆண்டுகளாக மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இங்கிலாந்து வெள்ளை பந்து அணிகளின் தலைமை பயிற்சியாளர் மேத்யூ மோட்ஸ் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தற்போது தற்காலிக பயிற்சியாளராக மார்க்க டிரஸ்கோதிக் இருக்கிறார். மேலும் ஜனவரி மாதத்தில் புதிய பயிற்சியாளராக பிரண்டன் மெக்கலம் வருகிறார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்
ஆஸ்திரேலியா அணி கடந்த ஆண்டில் ஆசஸ் டெஸ்ட் தொடர் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருந்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடர் இரண்டுக்கு இரண்டு என சமநிலையில் முடிந்தது. எதிர் நிலையில் தற்போது மூன்று டி20 போட்டி மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட இரண்டு தொடர்களில் விளையாடுவதற்கு இங்கிலாந்துக்கு ஆஸ்திரேலியா அணி வருகிறது.
இதில் முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்த மாதம் செப்டம்பர் 11ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 15ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி ஆரம்பித்து செப்டம்பர் 29ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.
ஜோஸ் பட்லர் ரூல்ட் அவுட்
இங்கிலாந்து வெள்ளைப்பந்து அணிகளின் பயிற்சியாளர் மேத்யூ மோட்ஸ் ராஜினாமா செய்ததை தொடர்ந்து கேப்டன் ஜோஸ் பட்லரும் நீக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா வெள்ளைப் பந்து தொடர்களுக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோஸ் பட்லர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.
இதையும் படிங்க : 94/7 டு 202/7.. கில் பாய் எதிரணி கேப்டனா இருந்தும் ஐடியா தந்தார்.. சதம் அடித்தேன் – முஷீர் கான் பேட்டி
இந்த நிலையில் காயம் காரணமாக ஜோஸ் பட்லர் முதலில் நடைபெறும் டி20 தொடரில் இருந்து ரூல்ட் அவுட் ஆகி இருக்கிறார். அதே சமயத்தில் புதிய கேப்டனாக இன்னொரு விக்கெட் கீப்பர் பில் சால்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார். கடந்த ஆண்டிலிருந்து இங்கிலாந்து டி20 கிரிக்கெட்டில் பில் சால்ட் முக்கிய வீரராக மாறி வருகிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்கு சிறப்பாக செயல்பட்டு இருந்தார். தற்பொழுது இங்கிலாந்து டி20 அணியின் புதிய கேப்டனாகவும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.