94/7 டு 202/7.. கில் பாய் எதிரணி கேப்டனா இருந்தும் ஐடியா தந்தார்.. சதம் அடித்தேன் – முஷீர் கான் பேட்டி

0
410
Musheer

இன்று துவங்கிய துலீப் டிராபியில் இந்தியா ஏ அணிக்கு எதிராக இந்திய பி அணி 19 வயதான இளம் வீரர் முஷீர் கான் அபாரமான சதம் அடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இன்றைய ஆட்ட நாள் முடிவுக்கு பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சதம் எப்படி வந்தது என்பது குறித்து பேசி இருக்கிறார்.இன்று துவங்கிய துலீப் டிராபியில் இந்தியா ஏ அணிக்கு எதிராக இந்திய பி அணி 19 வயதான இளம் வீரர் முஷீர் கான் அபாரமான சதம் அடித்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். இன்றைய ஆட்ட நாள் முடிவுக்கு பிறகு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சதம் எப்படி வந்தது என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இந்திய வீரர் சர்பராஸ் கானின் தம்பியான முஷீர் கான் இந்த ஆண்டு ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்கு விளையாட கிடைத்த வாய்ப்பில் நாக் அவுட் சுற்றில் மிகப் பிரமாதமாக விளையாடி தன்னை நிரூபித்து இருந்தார். தற்போது துலீப் டிராபியில் கிடைத்த முதல் வாய்ப்பிலும் சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

இக்கட்டில் சிக்கிய இந்தியா பி அணி

சுப்மன் கில் டாஸ் வென்று இந்தியா ஏ அணி பந்து வீசும் என அறிவித்தார். இந்தியா பி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 30 ரன்கள் எடுக்க, அடுத்து நட்சத்திர ஆட்டக்காரர்கள் சர்பராஸ் கான், ரிஷப் பண்ட், நிதீஷ் குமார் ரெட்டி வாஷிங்டன் சுந்தர் என எல்லோரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினார்கள்.

இதன் காரணமாக அந்த அணி 94 ரன்களுக்கு ஏழு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதைத்தொடர்ந்து பந்துவீச்சாளர் நவ்தீப் சைனியை வைத்துக்கொண்டு சிறப்பாக விளையாடி சதம் அடித்த முஷீர் கான் இன்றைய ஆட்ட நாள் முடிவில் ஆட்டம் இழக்காமல் 105 ரன்கள் எடுத்தார். மேலும் எட்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் 108 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது. தற்போது இந்தியா பி அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருக்கிறது.

- Advertisement -

சதம் வந்தது எப்படி?

இதுகுறித்து முஷீர் கான் கூறும் பொழுது “நான் ரன்களை பற்றி கவலைப்படாமல் அதிக பந்துகளை விளையாட முடிவு செய்தேன். நாள் முழுவதும் பேட்டிங் செய்ய விரும்பினேன். நான் செஷன் செஷனாக எடுத்துக் கொண்டேன். நான் பேட்டிங் செய்ய வரும்பொழுது ஸ்விங் மற்றும் கட்டிங் இருந்தது. எனவே தந்தை உடலோடு ஒட்டி விளையாட முடிவு செய்தேன். அபாயகரமான ஷாட் விளையாடுவதை தவிர்த்து விட்டேன். இறுதியில் ரன் வரும் என்று தெரியும்.

மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்து கொண்டிருந்த பொழுது பொறுமையாக இருந்து பார்ட்னர்ஷிப்பை அமையுங்கள் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். சைனி பாய் இரண்டு பந்துகள் இல்லை 6 பந்துகளையும் ஒரு ஓவரில் விளையாடுவேன் என்று எனக்கு நம்பிக்கை தந்தார். அவர் சரியாக இருந்ததால் என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது.பொதுவாக ஒரு ஓவரில் நான்கு பந்துகளை விளையாட நான் முடிவு செய்தேன். பின்னர் சிங்கிள் எடுக்க முயற்சி செய்தேன்.

இதையும் படிங்க : ருதுராஜை அவுட் செய்து.. பறக்கும் முத்தம் கொடுத்து வழி அனுப்பிய ஹர்ஷித் ரானா.. மீண்டும் பரபரப்பு.. துலீப் டிராபி 2024

குல்தீப் பாயை நான் சந்திப்பது இரண்டாவது முறையாகும். அவரிடமிருந்து எப்படி ரன்கள் எடுக்கவேண்டும் என எதிரணி கேப்டன் சுப்மன் கில் பாய் மற்றும் எங்கள் அணியில் இருக்கும் ரிஷப் பண்ட் ஆகியோர் அறிவுரை கூறினார்கள். நான் எந்தெந்த பந்துகளில் ரன்கள் எடுக்கலாம் என்று அவர்கள் எனக்கு தெளிவாக சொன்னார்கள். இப்படி என்னுடைய அணியிலும் எதிரணியிலும் மூத்த வீரர்கள் இருப்பது உதவியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -