இங்கிலாந்து பாகிஸ்தான் 3வது டி20.. வெளியேறிய பட்லர்.. கேப்டனான சிஎஸ்கே வீரர்.. வெளியான காரணம்

0
99

வருகிற டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அனைத்து சர்வதேச நாடுகளும் மற்ற நாடுகளோடு டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில் பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ள இங்கிலாந்து அணியில் கேப்டன் ஜாஸ் பட்லர் அணியில் இருந்து வெளியேற, இங்கிலாந்து அணியில் டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக பொறுப்பேற்க உள்ள சிஎஸ்கே வீரர் மொயின் அலி தற்போது 3வது டி20 போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

பாகிஸ்தான் இங்கிலாந்து டி20 தொடரின் முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட, இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இதில் மூன்றாவது டி20 போட்டி கார்ட்டிப் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது.

சொந்த நாட்டில் இந்தத் தொடர் நடைபெற்று வருவதால் இங்கிலாந்து அணி தொடரை வென்று புதிய உத்வேகத்துடன் டி20 உலக கோப்பையை எதிர்கொள்ளும். முதல் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியும் அடுத்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமநிலைப்படுத்த முயற்சிக்கும். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தொடரிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

ஜாஸ் பட்லருக்கு மூன்றாவது குழந்தை பிறக்க உள்ளதால் மகப்பேறு விடுப்பு எடுத்து இங்கிலாந்து அணியை விட்டு வெளியேற வேண்டிய நிலையில் இருக்கிறார். அப்படி அவர் விலகினால் வருகிற டி20 உலக கோப்பையில் துணை கேப்டனாக பொறுப்பேற்க உள்ள மொயின் அலி இங்கிலாந்து அணியின் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளது சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனும் ஆன ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணியில் இருந்து வெளியேற இருப்பது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இரண்டாவது டி20 போட்டியில் விளையாடிய பட்லர் 51 பந்துகளில் 84 ரன்கள் குவித்து இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நீங்க ஒரு ஜோக்கர் எப்பவுமே ஜோக்கர்.. நேரடியாக அம்பதி ராயுடுவை பேசிய பீட்டர்சன்.. என்ன நடந்தது?

தொடக்க ஆட்டக்காரர் ஆன இவரது இடத்தை நிரப்ப பென் டக்கட் மூன்றாவது டி20 போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்க உள்ளார். மூன்றாவது வரிசையில் வில் ஜாக்ஸ் களமிறங்குவார். பேட்டிங்கில் மட்டும் இல்லாமல் தற்போது பந்து வீச்சிலும் ஜோப்ரா ஆர்ச்சர் இணைந்திருப்பது இங்கிலாந்து அணிக்கு பந்துவீச்சில் மேலும் பலத்தை கூட்டியுள்ளது. பாகிஸ்தான் அணியும் தற்போது பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலுமே வலுவாக விளங்குவதால் இந்த டி20 தொடர் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

- Advertisement -