எவ்ளோ கிரிக்கெட் பாத்திருக்கேன் இதுதான் பெஸ்ட்.. தொடரை இழந்தாலும் ஆறுதலா இருக்கு – பட்லர் பேட்டி

0
6824

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

150 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 13 சிக்ஸர் என 135 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு அதிகபட்சமாக சிவம் துபே 13 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் அபிஷேக் சர்மாவை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறினார்கள்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் பொறுப்பற்ற ஆட்டத்தால் 10.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்கள் மட்டுமே எடுத்து 150 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய தோல்வியை அடைந்திருக்கிறது. ஏற்கனவே மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணிக்கு இது நான்காவது தோல்வியாக அமைந்துள்ளது.

- Advertisement -

தோல்வி ரொம்ப ஏமாற்றமா இருக்கு

இந்த தோல்விக்கான காரணம் குறித்து இங்கிலாந்து அணி கேப்டன் பட்டர் கூறும் போது ” தொடரை இழந்ததில் நாங்கள் ஏமாற்றம் அடைகிறோம். ஆனால் இந்தத் தொடரில் சில விஷயங்களை சிறப்பாக செய்துள்ளோம். மேலும் சில விஷயங்களை நாங்கள் மேம்படுத்த விரும்புகிறோம். இந்த பாணியில் ஆன கிரிக்கெட்டில் தொடர்ந்து அர்ப்பணிப்போடு செயல்படவும், சிறப்பாக செயல்படுவதற்கும் நாங்கள் விரும்புகிறோம். இந்தியா சொந்த மண்ணில் ஒரு அற்புதமான அணியாக இருக்கிறது.

இதையும் படிங்க:12 பந்து.. சர்ச்சைகளுக்கு பதிலடி தந்த ஷிவம் துபே.. வாயடைத்து போன இங்கிலாந்து அணி.. இந்தியா சாதனை வெற்றி

வான்கடே போன்ற மைதானத்தில் ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தில் விளையாடுவது அற்புதமாக இருக்கிறது. நேர்மறையான விஷயம் என்னவென்றால் இந்த போட்டியில் பிரைன் கார்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர். நான் நிறைய கிரிக்கெட்டை பார்த்திருக்கிறேன். இன்றைய அபிஷேக் ஷர்மாவின் இன்னிங்ஸ் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும் என்று நான் நினைக்கிறேன்” என்று பட்லர் கோரியிருக்கிறார். இதற்குப் பிறகு இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற வியாழக்கிழமை முதல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பங்குபெறும்.

- Advertisement -