12 பந்து.. சர்ச்சைகளுக்கு பதிலடி தந்த ஷிவம் துபே.. வாயடைத்து போன இங்கிலாந்து அணி.. இந்தியா சாதனை வெற்றி

0
6895

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்து தொடரை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து ஐந்தாவது டி20

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து கடைசி மற்றும் ஐந்தாவது டி20 போட்டியில் விளையாடியது. இதில் டாசை இழந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய, தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில் சஞ்சு சாம்சன் 16 ரன்னில் வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

37 பந்துகளில் சதம் அடித்த நிலையில் 54 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி மற்றும் 13 சிக்ஸ் என 135 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய வீரர்களில் சிவம் துபே மற்றும் அதிகபட்சமாக 13 பந்துகளில் 30 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் குவித்தது. இதில் இங்கிலாந்து அணியின் கார்ஸ் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

மாஸ் காட்டிய சிவம் துபே

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர் பென் டக்கட் 0 ரன்னில் வெளியேற மற்றொரு தொடக்க வீரர் பில் சால்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதற்குப் பின்னர் ஜாஸ் பட்லர் 7 ரன், ப்ரூக் 2 ரன், லிவிங்ஸ்டன் 9 ரன்னில் வெளியேற, தனது முதல் ஓவரின் முதல் பந்தினை வீசிய சிவம் துபே 55 ரன்னில் விளையாடிக் கொண்டிருந்த பில் சால்டை வீழ்த்தினார். முந்தைய போட்டியில் சிவம் துபே காயம் அடைந்த காரணத்தால் அவருக்கு பதிலாக வந்த ஹர்ஷித் ரானா விக்கெட்டுகள் வீழ்த்தி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க:கிரிக்கெட்டை நிறுத்திய பிறகுதான்.. இந்த ஒரு விஷயம் எனக்கு நல்லா புரிஞ்சுது.. இந்திய வீரர்களுக்கு சச்சின் அறிவுரை

இப்போது தூபே 12 பந்துகள் வீசி இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். தன்னாலும் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகள் கைப்பற்ற முடியும் என்று நிரூபித்திருக்கிறார். இந்திய அணியில் அதிகபட்சமாக முகமது சமி 3 விக்கெட்டுகள் கைப்பற்ற இங்கிலாந்து அணி 10.3 ஓவர்களில் 98 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.

- Advertisement -