முக்கியமான நேரத்தில்.. நான் செஞ்ச தப்புதான் தோல்விக்கு காரணம்.. இன்னும் இதை சரி செய்யனும் – பட்லர் கருத்து

0
1296

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தோல்விக்கான முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து நான்காவது டி20

புனேவில் நடைபெற்ற நான்காவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் களம் இறங்கிய இந்திய அணி மிடில் வரிசை வீரர்களின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோர் 53 ரன்கள் மற்றும் ரிங்கு சிங் 30 ரன்கள் குவித்தனர்.

இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி களம் இறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 6 ஓவர்களில் 62 ரன்கள் குவித்து நல்ல துவக்கம் ஏற்படுத்திக் கொடுத்தாலும் அதனை பின்னால் வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறினர். இதில் ஹாரி ப்ரூக் மட்டுமே அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 51 ரன்கள் குவித்தார். வெற்றி பெற வேண்டிய தருணத்தில் இருந்த இங்கிலாந்து அணி மிடில் வரிசை வீரர்களின் அவசரத்தால் விரைவில் விக்கெட்டை பறிகொடுத்து. 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் தோல்விக்கான காரணங்கள் குறித்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

தோல்விக்கான காரணம் குறித்து பட்லர்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “நாங்கள் எங்களது பேட்டிங்கே அற்புதமாக தொடங்கினோம். பவர் பிளேவில் தேவையான விக்கெட்டுகள் வீழ்த்தினோம். பேட்டிங் செய்யும்போது பவர் பிளேவின் முடிவில் நல்ல நிலையில் இருந்தோம். நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏமாற்றம் அளிக்கும் விதமாக நாங்கள் சில விஷயங்களை செய்தோம். நான் ஒரு நல்ல கேட்ச் வாய்ப்பை தவற விட்டேன்.

இதையும் படிங்க:17வது முறை.. சாதனை படைத்த இந்திய அணி.. பாண்டியா ராணா அசத்தல்.. ஹாரி ப்ரூக் அதிரடி வீண் இங்கி 4வது டி20

அதனால் சிவம் டுபே ஒரு அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். நாங்கள் பேட்டிங்கில் அற்புதமான நிலையில் இருந்த போது தேவையில்லாமல் விக்கெட்டுகளை இழந்தோம். இரண்டு முக்கிய விக்கெடுகளை இழந்ததால் ஆட்டத்தில் எதிர்பாராத தோல்வியை சந்தித்தோம். நாங்கள் எப்படி விளையாட விரும்புகிறோம் என்று என்பதை இரட்டிப்பாக்கிய போது அந்த விஷயம் என்னை மிகவும் ஈர்த்தது. நான் இன்னும் அதிகமான அர்ப்பணிப்புடன் விளையாட முடியும் என்று நினைக்கிறேன். எனவே தவறுகளை சரி செய்து அடுத்த போட்டியில் முன்னேறுவோம்” என்று கூறி இருக்கிறார்

- Advertisement -