“3-1 இருந்தா நாங்க தோத்துட்டோம்னு அர்த்தம் கிடையாது.. டீம் வேற மாதிரி இருக்கு” – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

0
326
Stokes

டெஸ்ட் கிரிக்கெட்டை தாக்குதல் பாணியில் விளையாடி, கடந்த ஒன்றரை வருடங்களாக ஒரு தொடரைக் கூட இழக்காமல் இந்தியா வந்த பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து டெஸ்ட் அணி முதல் முறையாக தொடரை இழந்திருக்கிறது.

தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி விளையாடும் அதிரடி முறைக்கு இந்திய சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடுவது கடினம் என்று முன்னாள் வீரர்கள் பலர் கூறி வந்தார்கள்.

- Advertisement -

ஆனால் இந்த முறை இங்கிலாந்து விளையாடிய ஆடுகளங்கள் பெரிய அளவில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய வந்து வீச்சாளர்கள் மிகத் திறமையாக பந்து வீசி வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்கள்.

அதேசமயத்தில் இங்கிலாந்து பேட்டிங் யூனிட் ஒரு இன்னிங்ஸில் நன்றாக விளையாடினால் அடுத்த இன்னிங்சில் சரியாக விளையாடாமல் இருந்ததால் இங்கிலாந்து அணி இந்த டெஸ்ட் தொடரை இழக்க வேண்டியதாக இருந்தது.

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இழந்து இருந்தாலும் கூட இங்கிலாந்து அணியின் கேப்டன் தங்கள் அணி பின்னடைவை சந்திக்கவில்லை என்று கூறி இருக்கிறார். மேலும் தங்களுக்கு இதனால் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் கிடைத்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும்பொழுது “தற்போது தொடரில் நாங்கள் மூன்றுக்கு ஒன்று என இருந்தாலும், நாங்கள் பின்னோக்கி சென்று விட்டோம் என்று அர்த்தம் கிடையாது. இந்த சுற்றுப்பயணத்தில் நாங்கள் ஒரு அணியாக மிகப்பெரிய அளவில் முன்னேறி இருக்கிறோம். மேலும் தனிநபர் வீரர்களும் சிறந்த வகையில் செயல்பட்டு இருக்கிறார்கள். இந்தச் சுற்றுப்பயணத்தில் ஒட்டுமொத்தமாக அணி பெரிய அளவில் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

அணியில் விளையாடிய அனைவரும் தங்களை சிறந்த முறையில் வெளிப்படுத்துவதற்கு விளையாடிய விதம் உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த தொடருக்கு முன்பு நாங்கள் எப்படி விளையாடினோம் என்பது மிகவும் வித்தியாசமான உணர்வு.

இதையும் படிங்க : நாளை இந்திய உத்தேச பிளேயிங் XI.. 2 மாற்றம் நடக்குமா?.. ரோகித் ட்விஸ்ட் வைப்பாரா?

ஜானி பேர்ஸ்டோ தனது நூறாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார். எனக்கு இருக்கும் ஒட்டுமொத்த உணர்வுகளை விட அவருக்கு இது மிகவும் அதிகமாக இருக்கும். அவருடைய மொத்த குடும்பமும் வரவிருக்கிறது. இந்த வாரம் முழுவதும் அவரைப் பற்றி பேசப்படும். அதற்கு அவர் மிகவும் தகுதியானவர்” என்று கூறி இருக்கிறார்.