பும்ராவ பார்த்து பயம் கிடையாது.. என் டீமுக்கு அந்த ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிட்டேன் – பென் ஸ்டோக்ஸ் பேச்சு

0
24
Bumrah

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் எதிர்கொள்ள எந்த பயமும் இல்லை என இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியிருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்த போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை ஹெட்டிங்லி மைதானத்தில் துவங்க இருக்கிறது. பேட்டிங் செய்வதற்கு சாதகமான இந்த மைதானத்தில் முதல் போட்டி நடைபெறுவதால் எதிர்பார்ப்புகள் மிக அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.

- Advertisement -

பும்ரா கொடுக்கும் பயம்

2024 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா வந்த பொழுது ஆடுகளங்கள் சுழல் பந்து வீச்சுக்கு பெரிய அளவில் ஒத்துழைக்கும் படி அமைக்கப்படவில்லை. பேட்டிங் செய்வதற்கு கொஞ்சம் சாதகமாகவே ஆடுகளங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த சூழ்நிலையிலும் பும்ரா தன்னுடைய அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங், யார்க்கர் பந்துவீச்சை கொண்டு நட்சத்திர வீரர் ஜோ ரூட் துணை கேப்டன் ஒல்லி போப் மற்றும் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக இருந்தார். அவரது பந்து வீச்சுக்கு எந்தவித போராட்டமும் இன்றி இவர்கள் எளிதாக சரணடைந்தார்கள். எனவே பும்ராவை எதிர்கொள்வது குறித்து இங்கிலாந்து முகாமில் பெரிய அச்சம் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அவரைப் பார்த்து பயப்படாதீங்க

இந்த நிலையில் பும்ரா பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் பேசும்போது “பும்ராவை பார்த்து பயப்படாதீங்க. சர்வதேச கிரிக்கெட்டில் தரமான அணிகளை எல்லா நேரங்களிலும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். பும்ரா எந்த அணிக்கு எதிராக விளையாடும் பொழுதும் என்ன மாதிரியான விஷயத்தை கொண்டு வருகிறார் என்பது எங்களுக்கு மிக நன்றாகவே தெரியும்”

இதையும் படிங்க : இலங்கை அணிக்கு கேப்டனா இருந்து முடி கொட்டியதுதான் மிச்சம்.. இது எனக்கு மட்டுமே நடக்கல – மேத்யூஸ் பேச்சு

“பயத்தைப் பொறுத்தவரையில் நிச்சயமாக எங்களுக்கு கிடையாது. ஒரே ஒரு பவுலர் மட்டுமே இரு அணிக்கு இடையே நடக்கும் தொடரை வென்று விட முடியும் என நான் நினைக்கவில்லை. ஒரு டெஸ்ட் தொடரை வெல்வதற்கு ஒரு அணியில் விளையாடும் 11 வீரர்களும் சிறப்பாக இருக்க வேண்டும். மேலும் டெஸ்ட் தொடரை ஒரே ஒரு வீரராக வெல்லும் அளவுக்கு இரண்டு அணியிலும் எந்த வீரரும் இல்லை என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -