இலங்கை அணிக்கு கேப்டனா இருந்து முடி கொட்டியதுதான் மிச்சம்.. இது எனக்கு மட்டுமே நடக்கல – மேத்யூஸ் பேச்சு

0
96
Angelo

இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் இலங்கை அணிக்கு கேப்டனாக இருந்த பொழுது அதிகமாக முடி கொட்டியது என சுவாரசியமான கருத்தை கூறியிருக்கிறார்.

தற்போது இலங்கை காலே மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டி உடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏஞ்சலோ மேத்யூஸ் ஓய்வு பெற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மைதானத்தில் இதற்காக அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

பேட்டிங் யூனிட்டில் கடைசி லெஜெண்ட்

இலங்கை பேட்டிங் யூனிட்டில் குமார் சங்கக்கரா மற்றும் மகேல ஜெயவர்த்தன இருவருக்கு அடுத்து மிகப்பெரிய வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் இருந்தார். முதல் இருவர் ஓய்வு பெற்று விட்ட பொழுதும் தன்னால் முடிந்த அளவுக்கு இலங்கை கிரிக்கெட்டுக்கு பங்காற்றியவர் தற்பொழுது ஓய்வு பெற இருக்கிறார். இலங்கை கிரிக்கெட்டின் கடைசி சிறந்த பேட்ஸ்மேன் தற்பொழுது ஓய்வு பெறுகிறார்.

தற்பொழுது 38 வயதாகும் ஏஞ்சலோ மேத்யூஸ் 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44 ரன் ஆவரேஜில் 8,167 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 16 சதங்கள் மற்றும் 45 அரை சதங்கள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 33 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -

அதிகமாக முடி கொட்டியது

தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற இருக்கும் ஏஞ்சலோ மேத்யூஸ் பேசும் பொழுது “நான் இலங்கையின் கேப்டனாக இருந்த பொழுது எனக்கு தலையில் அதிகமாக முடி கொட்டியது. இது கேப்டனாக இருக்கக்கூடிய எல்லோருக்கும் நடக்கக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது”

இதையும் படிங்க : இங்கிலாந்து அணி அதுக்காக வெட்கப்படனும்.. இந்தியா கிட்ட இத செஞ்சா தோல்வி நிச்சயம் – பாய்காட் அறிவுரை

“இலங்கை அணி என்று கிடையாது நீங்கள் உலகில் எந்த அணியை கேப்டனாக இருந்து வழிநடத்தினாலும் உங்களுக்கு தலையில் இருந்து மூடி கொட்டும். ஏனென்றால் கேப்டன் பதவி என்பது ஒரு பெரிய பொறுப்பு. உங்களை எல்லோரும் எல்லா நேரத்திலும் கவனித்துக் கொண்டிருப்பார்கள். மேலும் சில நேரங்களில் இந்த பொறுப்பு வழியாக இருந்தாலும் கூட நான் ஜாலியாகத்தான் செய்தேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -