வெறும் 82 ரன்கள் 10 விக்கெட்.. 241 வித்தியாசம்.. வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி.. இங்கிலாந்து பிரம்மாண்ட வெற்றி.. 2-0 தொடரையும் கைப்பற்றியது

0
562
Root

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இங்கிலாந்தில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதிக்கொண்டு வருகின்றன. இந்த தொடரில் தற்பொழுது இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்ஹாம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மெகா வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89 ஓவர்கள் மட்டுமே சந்தித்து 416 ரன்கள் குறித்தது. அந்த அணிக்கு போப் 121 ரன்கள் எடுத்து ரன் குவிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் அல்ஜாரி ஜோசப் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கெவிம் ஹாட்ஜ் சிறப்பாக விளையாடி 120 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகச்சிறப்பாக விளையாடி 457 ரன்கள் குவித்து 41 ரன்கள் முன்னிலையும் பெற்றது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 122, ஹாரி புரூக் 109 ரன்கள் என இருவரும் சதம் அடிக்க, 425 ரன்கள் மீண்டும் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 385 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ஜெய்டன் சீல்ஸ் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

நான்காவது நாள் இன்று 385 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 61 ரன்களுக்கு விக்கெட் இழப்பில்லாமல் விளையாடிக் கொண்டிருந்தது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 5வது நாளில் ஆச்சரியத்தை கொடுத்து இங்கிலாந்தை வீழ்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு உருவானது.

இந்த நிலையில் மேற்கொண்டு 82 ரன்கள் மட்டுமே எடுத்து 143 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்து வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தரப்பில் கேப்டன் பிராத்வெயிட் 47 மற்றும் ஜேசன் ஹோல்டர் 37 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணியின் தரப்பில் சோயப் பஷீர் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : 22/5.. சரிந்த சேலம் அணி.. நடராஜன் தந்த மாஸ் கம்பேக்.. திருப்பூர் அணி பெரிய வெற்றி.. 2024 டிஎன்பிஎல்

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று இருந்த இங்கிலாந்து அணி இந்த இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 எனக் கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -