இந்த இரண்டு அணிகளில் ஒன்று டி20 உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது – இங்கிலாந்து கேப்டன் மொயின் அலி பதில்!

0
6053

நாங்கள் ஆபத்தான அணியாக இருக்கிறோம். ஆனால் இந்த இரண்டு அணிகளும் உலகக்கோப்பை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என பேசினார் இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி.

டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னோட்டமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஏழு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது இங்கிலாந்து அணி. ஆறு போட்டிகள் முடிவில் தலா மூன்று வெற்றிகளுடன் சமநிலையில் இருந்தது.

- Advertisement -

வெற்று தோல்வியை நிர்ணயிக்கும் ஏழாவது டி20 போட்டி அக்டோபர் இரண்டாம் தேதி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 209 ரன்கள் அடித்து மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது. மிகப்பெரிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணிக்கு எப்போதும் நம்பிக்கையாக இருக்கும் துவக்க ஜோடி பாபர் அசம் – ரிஸ்வான் இருவரும் 4 ரன்கள் மற்றும் 1 ரன்னுக்கு முறையே ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.

அடுத்து வந்த மசூத் சற்று நிலைத்து ஆட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறியதால், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 67 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று 4-3 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

போட்டி முடிந்த பிறகு பேட்டி அளித்த இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி கூறுகையில், “இந்த தொடர் எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. குறிப்பாக கடைசி இரண்டு போட்டிகள் விளையாடிய விதம் பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. உலகக்கோப்பைக்கு முன்பாக இத்தகையை வெற்றியை பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. இங்கிலாந்து அணி தற்போது ஆபத்துமிக்க அணியாக திகழ்ந்து வருகிறது. உலகக்கோப்பை வெல்வதற்கு முழு முனைப்புடன் காத்திருக்கிறோம்.

அதே நேரம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகளும் உலகக் கோப்பை வெல்வதில் அதிக வாய்ப்புள்ள அணிகளாக திகழ்கிறது. இந்த இரண்டு அணிகளும் மிகப்பெரிய அணியாக காணப்பட்டாலும் தற்போது இங்கிலாந்து அணி இருக்கும் மனநிலை ஆரோக்கியமானது என்பதால் எங்களால் அதிகளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.” என்று பேசினார்.

அடுத்ததாக, ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி விளையாட உள்ளது. அதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றும் மொயின் அலி தனது பேட்டியில் குறிப்பிட்டார்.

- Advertisement -