இலங்கை அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில் இங்கிலாந்து முன்கூட்டியே பிளேயிங் லெவனை அறிவித்து அசத்தியிருக்கிறது.
இந்த தொடரில் இங்கிலாந்து அணிக்கு இரண்டு பின்னடைவுகளாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மற்றும் துவக்க அதிரடி ஆட்டக்கார ஜாக் கிரவுலி இருவரும் காயத்தின் காரணமாக விளையாட முடியாமல் வெளியேறியிருக்கிறார்கள். அதே சமயத்தில் இலங்கை அணிபயிற்சி போட்டியில் இங்கிலாந்து ஏ அணியிடம் படுதோல்வி அடைந்திருக்கிறது.
இந்த தொடரின் முதல் போட்டி நாளை மறுநாள் ஆகஸ்ட் 21ஆம் தேதி, மான்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் டிராப்போர்டு மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 29 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 6ஆம் தேதி லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.
தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஒல்லி போப் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு துணை கேப்டனாக ஹாரி புரூக் இன்று தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்கூட்டியே இங்கிலாந்து தனது பிளேயிங் லெவனை அறிவித்து இருக்கிறது. ஜாக் கிரவுலி இடத்தில் டான் லாரன்ஸ் துவக்க வீரராக வருகிறார். பென் ஸ்டோக்ஸ் இடத்தில் தைரியமாக ஒரு கூடுதல் வேகப்பந்து பேச்சாளராக மேத்யூ பாட்ஸ் கொண்டுவரப்பட்டிருக்கிறார். ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளராக சோயப் பஷீர் இருக்கிறார்.
தற்போது பென் ஸ்டோக்ஸ் இல்லாத காரணத்தினால் ஐந்து முழுமையான பந்துவீச்சாளர்களுடன் இங்கிலாந்து களமிறங்குகிறது. முன்பு நான்காவது வேகப்பந்துவீச்சாளராக ஸ்டோக்ஸ் இருந்தார். இப்போது அந்த இடத்திற்கு மேத்யூ பாட்ஸ் சேர்க்கப்பட்டிருக்கிறார். எனவே இதன் காரணமாக இங்கிலாந்து பந்துவீச்சு தாக்குதலை முழுமையாக இலங்கை அணியின் மீது தொடுக்கும். அதிவேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் மற்றும் கஸ் அட்கின்சன் இலங்கையின் பேட்டிங் யூனிட்டுக்கு பெரிய தொல்லை தர காத்திருக்கிறார்கள். ஸ்டோக்ஸ் இல்லாததால் இலங்கை அணிக்கு கூடுதல் பிரச்சினைதான் ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : இந்தியா இப்படி செய்யாது.. ஆனா பாக் கிரிக்கெட் இந்த பையன் வாழ்க்கையை கெடுத்துருச்சு – கம்ரன் அக்மல் விமர்சனம்
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து பிளேயிங் லெவன் :
டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கே), ஜோ ரூட், ஹாரி புரூக் (து.கே), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், மார்க் வுட் மற்றும் சோயிப் பஷீர்.