“இங்கிலாந்து 5 டெஸ்ட்.. இந்தியாதான் ஜெயிக்கும்.. காரணம் இதான்” – இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஒப்புதல்

0
238
Atherton

தற்போது டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தை திறமையாக விளையாடுவதற்கு ஆறு நாடுகள் இருக்கிறது. ஆனால் அவற்றில் மூன்று நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடும் போதுதான் லாபம் வருகிறது.

அந்த மூன்று நாடுகள் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா. இந்த மூன்று நாடுகளால் தான் தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட் கொஞ்சமாவது உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

மற்ற நாடுகள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் பொழுது வருமானம் இல்லாத காரணத்தினால், தற்பொழுது அவர்கள் விளையாடும் டெஸ்ட் தொடர்கள் இரண்டு போட்டி கொண்டவைகளாக சுருக்கப்பட்டு வருகின்றன.

இரு பெரிய டெஸ்ட் நாடுகள் விளையாடுவதாலும், இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அதிரடி அணுகுமுறை இந்தியாவில் பலிக்குமா? என்கின்ற எதிர்பார்ப்பாலும், தொடர் குறிப்பு நிறைய சுவாரசியமான எதிர்பார்ப்புகள் ரசிகர்களுக்கு இருக்கிறது.

இந்த நிலையில் மூன்று பெரிய நாடுகளில் இரண்டான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் தொடரில் இந்தியாவில் ஜனவரி 25 முதல் விளையாட இருக்கின்றன.

- Advertisement -

இந்த நிலையில் இந்த தொடர் குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஆதர்டன் கூறும் பொழுது ” இந்தத் தொடரில் இந்தியாதான் வெற்றி பெறும் என்று நினைக்கிறேன். இங்கிலாந்தை விட இந்தியாவின் சுழற் பந்துவீச்சாளர்கள் திறமையானவர்கள். இறுதியில் இந்தியாவில் டெஸ்ட் விளையாடும் பொழுது வெற்றியை இவர்களே தீர்மானிப்பார்கள். அதே சமயத்தில் இந்தியாவிடம் வலிமையான வேகப்பந்துவீச்சு தாக்குதலும் இருக்கிறது.

இங்கிலாந்து இந்த முறை கொண்டு வரும் சுழற் பந்துவீச்சாளர்களில் ஜாக் லீச் மட்டுமே திடமான சுழற் பந்துவீச்சாளர். ரேகான் அஹமத், டாம் ஹார்ட்லி மற்றும் சோயப் பஷீர் மூவரும் அனுபவம் மற்றவர்கள். ஆனால் தேர்வாளர்கள் இவர்களிடம் உச்சபட்சத்தை எதிர்பார்க்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

ஆனாலும் இங்கிலாந்து அணி கடந்த முறைகள் போல் இல்லாமல் இந்த முறை பென் ஸ்டோக்ஸ் தலைமையில் எதிர்த்து தீவிரமாக போராடும் மனப்பான்மையுடன் இருக்கும் அணியாக இருக்கிறது. மேலும் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட் திட்டங்களும்மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. எனவே இங்கிலாந்து இந்தியாவுக்கு கடுமையான போட்டியை கொடுத்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.