ENG vs NZ.. 9 பேர் 12 ரன்னை தாண்டல.. திருப்பி அடித்த நியூசிலாந்து.. ஆர்சிபி வீரர் காட்டிய மாஸ்!

0
3509
NZ

நியூசிலாந்த அணி தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டு நான்கு போட்டிகள் கொண்ட டி20 மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது!

இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளை இங்கிலாந்து அணி வென்று வலிமையான முன்னிலை பெற்று இருந்தது. இந்த நிலையில் இன்று தொடரின் மூன்றாவது போட்டி நடைபெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது. இந்த போட்டியிலும் அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கான்வே ஒன்பது ரண்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். அடுத்து வந்த டிம் ஷெப்பர்ட் 19 ரன்கள் வெளியேறினார்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் மற்றும் கிளன் பிலிப்ஸ் இருவரும் சேர்ந்து இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சிதறடித்து அதிரடியாக ரன் சேர்த்தார்கள். இந்தத் தொடரில் முதல்முறையாக நியூசிலாந்து அணியின் பேட்டிங் யூனிட் வெடித்தது.

மிகச் சிறப்பாக விளையாடிய கிளன் பிலிப்ஸ் 34 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் ஐந்து சிக்ஸர்கள் உடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். பின் ஆலன் 53 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உடன் 83 ரன்கள் குவித்தார்.
20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இந்த போட்டியை வென்றால் நான்கு போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை வெல்லலாம் என்ற நோக்கத்தில் இங்கிலாந்து அணி களம் இறங்கியது. ஆனால் கடந்த இரு ஆட்டங்களாக அதிரடி காட்டிய இங்கிலாந்து பேட்டிங் யூனிட்டால் இந்த முறை எதுவுமே செய்ய முடியவில்லை.

இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடி 21 பந்தில் மூன்று பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 40 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். மொயின் அலி 16 பந்துகளில் ஒரு பவுண்டரி இரண்டு சிக்ஸர்கள் உடன் 26 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இவர்களுக்கு அடுத்த அதிகபட்ச ரன் எடுத்த இங்கிலாந்து வீரராக ஜானி பேர்ஸ்டோ 12 ரன்கள் எடுத்தார். மற்ற எல்லா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள். முடிவில் இங்கிலாந்து அணி 18.3 ஓவர்களில் 128 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

நியூசிலாந்து அணி இந்த தொடரில் 74 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் நியூசிலாந்து அணி இன்னும் நீடிக்கிறது. கையில் ஜெமிசன் மற்றும் இஷ் சோதி இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்!