அடித்ததோ 47 ரன்கள் இழந்தது 7 விக்கெட்ஸ் இங்கிலாந்து அணி பரிதாபம்! – கவாஜா அரைசதத்தால் ஆஸ்திரேலியா 200+ முன்னிலை!

0
7174

இங்கிலாந்து 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா 91 ரன்கள் முன்னிலையிடன், இரண்டாம் இன்னிங்சில் 132 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதி வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் 110 ரன்கள் குவிக்க, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு பென் டக்கட் 98 ரன்கள் அடித்தார். இரண்டாம் நாள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்திருந்த இங்கிலாந்து அணி 278 ரன்கள் அடித்தது. களத்தில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஹரி ப்ரூக் இருவரும் இருந்தனர்.

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் துவங்கிய இரண்டாவது பந்திலேயே பென் ஸ்டோக்ஸ் 17 ரன்களுக்கு அவுட் ஆனார். அரைசதம் அடித்த அடுத்த பந்தலிலேயே ஹாரி ப்ரூக் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் சொற்பரன்களுக்கு வெளியேற, மூன்றாவது நாளில் வெறும் 47 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.

அத்துடன் முதலில் இன்னிங்சில் 325 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணியை விட 91 ரன்கள் பின்தங்கிய நிலையிலும் இருந்தது.

- Advertisement -

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் 25 ரன்களுக்கு அவுட் ஆனார். முதல் விக்கெட்டிற்கு கவாஜா-வார்னர் ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. அடுத்து உள்ளே வந்த லபுச்சானே கவாஜா உடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 60 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். பின்னர் லபுச்சானே 30 ரன்களுக்கு அவுட் ஆனார்.

களத்தில் ஸ்டீவ் ஸ்மித் 6 ரன்களிலும், அரைசதம் கடந்த கவாஜா 58 ரன்களுடனும் இருந்தனர். ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட்டுகள் இழந்து 130 ரன்கள் அடித்திருந்தது. மொத்தம் 221 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் முடிவடைய கிட்டத்தட்ட 30 ஓவர்கள் மீதம் இருக்கும் நிலையில் போட்டியின் நடுவே மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது. அதன் பிறகு கடைசி வரை மழை நிற்கவில்லை. பின்னர் இரண்டாம் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.