விடியோ: வித்தியாசமான முறையில் அவுட்டான ஹாரி புரூக்… நக்கலடித்து கொண்டாடிய ஆஸி., வீரர்கள்!

0
1857

நாதன் லயன் பந்தில் அடிக்க முயற்சித்து வித்தியாசமான முறையில் அவுட் ஆகியுள்ளார் ஹரி புரூக். இவரது விக்கெட்டை எடுத்தவுடன் ஆஸி., வீரர்கள் நக்கல் அடித்து கொண்டாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாக வருகிறது அதை கீழே பார்க்கலாம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே ஆசஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி பிர்மிங்கம் மைதானத்தில் நடக்கிறது.

- Advertisement -

முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. ஜாக் காலை மற்றும் டக்கட் இருவரும் ஓபனிங் இறங்கினர் துவக்கம் முதலே அதிரடியான அணுகுமுறையுடன் இந்த ஜோடி ஆரம்பித்தது துரதிஷ்டவசமாக டக்கட் 12 ரன்கள் அடித்து அவுட் ஆனார்.

அடுத்து வந்த ஆலி பாப், ஜாக் கிராலியுடன் ஜோடி சேர்ந்து ரன்குவிப்பில் ஈடுபாட்டார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது. ஆலி போப் 31 ரன்களுக்கு அவுட் ஆனார்.

துவக்கம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ஜாக் கிராலி 53 பந்துகளுக்கு அரைசதம் அடித்து அசத்தினார். உணவு இடைவேளைக்கு மீதம் இரண்டு பந்துகள் இருக்க ஸ்காட் போலண்ட் வீசிய பந்தில் அடிக்க முயற்சித்து கீப்பரிடம் பிடிபட்டு ஜாக் கிராலி வெளியேறினார். இவர் 73 பந்துகளுக்கு 61 ரன்கள் அடித்திருந்தார்.

- Advertisement -

அதிரடிக்கு பெயர் போன ஹாரி புரூக் உணவு இடைவேளை முடிந்த வந்த உடனேயே அதிரடியாக பேட்டிங்கை ஆரம்பித்தார். நேதன் லயன் வீசிய பந்தை அடிக்க முயற்சித்தபோது, பந்து மேலே சென்றது. கீப்பரும் பந்தை பிடிக்க தவறிவிட்டார். ஆனால் நேராக ஸ்டம்பில் அடித்து ஹாரி புரூப் போல்ட் ஆனார். இந்த விக்கெட் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. இதை நக்கல் அடித்து ஆஸி., வீரர்கள் கொண்டாடினர். இதன் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் இன்னிங்சில் தற்போது வரை ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ள இங்கிலாந்து அணி 190 ரன்கள் அடித்திருக்கிறது. ஜோ ரூட் மற்றும் பேர்ஸ்டோவ் இருவரும் களத்தில் உள்ளனர்.